'இதையெல்லாம்' இப்போ சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க..!
கல்யாணம் ஆனவங்க, பள்ளி கல்லூரி காலங்களை நினைத்து பார்த்து அசைப்போடுவது போல, சில நேரங்களில் நாம் நமது பழைய செல்போன்களை பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டு. அந்த சந்தோஷத்தை நாமும், நம்மோடு அதே வகையான செல்போன்களை பயன்படுத்தியவர்களால் மட்டுமே உணர முடியும்.
அடுத்த ஆண்ராய்டு வெர்ஷன் எது..? அடுத்த ஐபோனில் என்னென்ன சிறப்பம்சம் வரும் என்று காத்திருக்கும் இந்த தலைமுறை மக்களால் நிச்சயமாக 'அந்த சந்தோஷத்தை' உணர முடியாது. அவ்வளவு ஏன்.. அதையெல்லாம் சொன்னால் கூட "அட போங்கப்பா.. காதுல பூ சுத்தாதீங்க..!" என்று சொல்வார்கள்.
அப்படியாக, இந்த தலைமுறை மக்களால் நம்பமுடியாத, அந்த காலத்து செல்போன் பற்றிய 9 உண்மைகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

01. பேட்டரி :
பழைய செல்போன்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சார்ஜ் செய்தால் போதும்.

02. கேம் :
ஸ்னேக் கேம் தான் உலகிலேயே மிகவும் சிறந்த கேம்..!

03. வகை :
எல்லா செல்போன்களும் பார்க்க ஒரே மாதிரி இருக்காது. (ஸ்மார்ட்போன்களில் பல வகைகள் வந்து விட்டாலும் கூட கிட்டத்தட்ட பார்க்க அனைத்துமே ஒன்று போல் தான் இருக்கும்)

04. இன்டர்நெட் :
இன்டர்நெட் என்பது மிகவும் அரிது, இன்டர்நெட் வசதி படைத்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவர்.

05. டச் ஸ்க்ரீன் :
2007-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஒருவருமே டச் ஸ்க்ரீன் போன் மீது ஆர்வம் கொள்ளவில்லை.

06. விண்டோஸ் போன்கள் :
2000-ஆம் ஆண்டு வாக்கில் வெளியான முதல் விண்டோஸ் போன்கள் தான் மொபைல் போன்களின் எதிர்காலம் என்று நம்பப்பட்டது.

07. ஆப்ரேட்டர் :
ரிங்டோன், வால் பேப்பர் என எல்லாவற்றிக்குமே ஆப்ரேட்டர்களுக்கு பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

08. பலம் :
போன் உடைந்து விட்டது என்று யாரேனும் சொல்லி கேட்பது மிக மிக அரிதான விடயமாகும்.

09. ஆப்பிள் - நோக்கியா :
இந்த காலத்தில் உங்களுக்கு ஆப்பிள் எப்படியோ.. அப்படித்தான் அந்த காலத்தில் எங்களுக்கு நோக்கியா..!

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications