Home
Mobile

1 இல்ல.. 9 காரணங்கள் இருக்கு.. கண்ணை மூடிக்கிட்டு இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க!

நம்ப முடியாத பட்ஜெட் விலையில் அறிமுமாகி உள்ளது என்பதற்காகவோ அல்லது இது ஒன்பிளஸின் லேட்டஸ்ட் 5ஜி போன் என்பதற்காகவோ.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (Oneplus Nord CE 3 Lite 5G) மாடலை வாங்கி விட வேண்டாம்.

ஏனென்றால், நீங்கள் மேலோட்டமாக பார்ப்பதை விட இந்த போனில் எக்கச்சக்கமான விஷயங்கள் புதைந்துள்ளன. முதலில் இந்த போனின் விலை என்ன? இது எப்போது முதல் விற்பனைக்கு வரும்? ஏதேனும் அறிமுக சலுகைகள் கிடைக்குமா? போன்ற விவரங்களை பார்ப்போம்; பின்னர் இதை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 9 காரணங்களை பார்ப்போம்!

OnePlus நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: கண்ணை மூடிக்கிட்டு வாங்க 9 காரணங்கள்!

மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (8ஜிபி + 128ஜிபி; 12ஜிபி + 256ஜிபி) முறையே ரூ.19,999 மற்றும் ரூ.21,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 11 முதல் தொடங்குகிறது. இது ஒன்பிளஸ்.இன், அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் ரீடெயில் ஸ்டோர்ஸ் வழியாக வாங்க கிடைக்கும்.

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கியின் ரூ.1000 தள்ளுபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டோர்களில் வெறும் ரூ.99 க்கு 1 வருட நீடிக்கப்பட்ட வாரண்டி போன்ற ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி வாருங்கள், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை "கண்களை மூடிக்கொண்டு" வாங்குவதற்கான 9 காரணங்களை பார்ப்போம்:

முதல் காரணம்: இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் 108எம்பி கேமரா ஸ்மார்ட்போனாகும். மெயின் கேமராவுடன் இரண்டு 2எம்பி கேமராக்கள் என மொத்தம் 3 கேமராக்கள் (ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்) உள்ளன. இரண்டாவது காரணம்: இதன் கேமரா செட்டப்பில் 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூமிற்கான (3x Lossless Zoom) ஆதரவும் உள்ளது.

மூன்றாவது காரணம்: இந்த போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே 4ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) விரிவாக்கத்தையும் ஆதரிக்கின்றன. நான்காவது காரணம்: இந்த ஒன்பிளஸ் போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலுமே ஹைப்ரிட் சிம் ஸ்லாட் உள்ளது. இதன் கீழ் ஒரே நேரத்தில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும் அல்லது 1 சிம் மற்றும் 1 மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த முடியும்.

ஐந்தாவது காரணம்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனில் உள்ள 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவானது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது. அதாவது டிஸ்பிளேவின் கன்டென்ட்டை பொறுத்து 30Hz / 48Hz / 50Hz / 60Hz / 90Hz / 120Hz க்கு இடையே ரெஃப்ரெஷ் ரேட்டை சரிசெய்ய முடியும்.

ஆறாவது காரணம்: இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் வருகிறது; அது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சுவாரசியமாக ஸ்மார்ட்போனின் பாக்ஸில் ஃபாஸ்ட் சார்ஜரும் வரும். ஏழாவது காரணம்: ஒன்பிளஸின் இந்த புதிய 5ஜி போன் மொத்தம் 13 5ஜி பேண்டுகளை ஆதரிக்கிறது. அதாவது, இது ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி-ஐ ஆதரிக்கும்.

எட்டாவது காரணம்: இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜென்ஓஎஸ் 13.1 உடன் வருகிறது. ஒன்பதாவது காரணம்: கடைசியாக இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கஸ், நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட், ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
9 Reasons To Buy Latest Oneplus Nord CE 3 Lite 5G Without Any Hesitation Sale Starting From April 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X