Home
Mobile

மிரளுது ஆர்டர்.. ரூ.17,000 பட்ஜெட்ல சாம்சங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படி அமேசான் விற்பனையில் (Amazon Sale) விஷன் பூஸ்டர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா, 1 டிபி மெமரி, 25W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) போனானது, பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

பிரீமியம் லுக் கொடுக்கும் பட்ஜெட் மாடல்களில் இந்த சாம்சங் போனும் வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,499 ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1500 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.18,100 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

மிரளுது ஆர்டர்.. ரூ.17,000 பட்ஜெட்ல சாம்சங்.. AMOLED டிஸ்பிளே மாடல்!

ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம். இதுபோக ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் ஈஎம்ஐயில் வாங்கினால் ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ப்ளூ (Blue), லைட் ப்ளூ (Light Blue) மற்றும் ப்ளூ பிளாக் (Blue Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி பேக் செய்கிறது?

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 5G Specifications): இந்த சாம்சங் மாடலில் விஷன் பூஸ்டர் (Vision Booster) சப்போர்ட் கொண்ட 6.5 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 பீக் பிரைட்னஸ் கொண்ட இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) மாடலாகும்.

ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஓஎஸ் மற்றும் சிப்செட்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதாவது, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. சாம்சங்கின் ஒன் யுஐ 6.0 (One UI 6.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது.

கேமிங் பிரியர்களுக்கு பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், இந்த போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. பட்ஜெட்டில் வருவதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 200 கிராம் எடை கொண்டிருக்கிறது. மேலும், 8.4 எம்எம் தடிமன் வருகிறது. 3.5 எம்எம் ஆடியே ஜாக் (Audio Jack), 5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
9 Percent Discount Samsung Galaxy A15 5G With 50MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X