பொளக்குது விற்பனை.. ரூ.14,000 விலை குறைப்பு.. 50MP பெரிஸ்கோப்.. 100X ஜூமிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
வாங்கனும்னு ஆசைதான், ஆனால் விலை அதிகமாக இருக்கு, நல்ல டிஸ்கவுண்ட் கிடைச்சா வாங்கிக்குவோம்னு காத்திருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) பிரியர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், குவாட் எச்டி டிஸ்பிளே, டெலிபோட்டோ லென்ஸ், IP68 ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கும் இந்த சாம்சங் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specification): இந்த எஸ்24 அல்ட்ரா மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6.1 (One UI 6.1) வருகிறது. 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் வருகிறது. அதேபோல 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படுகிறது. பிரீமியமான அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பிரீமியம் பர்பஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. டைட்டானியம் ஃபிரேம் (Titanium Frame) மற்றும் கொரில்லா ஆர்மோர் புரொடெக்சன் (Gorilla Armor Protection) கொண்டுள்ளது. குவாட் எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷனுடன் 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளே இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (Infinity-O-Edge Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ + 12 எம்பி அல்ட்ரா லென்ஸ் + 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா சிஸ்டம் வருகிறது.
இந்த மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி, ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. டெலிபோட்டோ கேமராவில் 3x ஜூமிங் வருகிறது. பெரிஸ்கோப்பில் 5x ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 10x ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் வருகிறது. மேலும், 100x ஸ்பேஸ் ஜூமிங் மற்றும் 3டி சிஓஎப் (3D ToF) உள்ளது.
12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 1 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 8.6 மிமீ தடிமன், 232 கிராம் எடை உள்ளது. இந்த சாம்சங் போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) வருகிறது. இந்த போனின் 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,29,999ஆக இருக்கிறது.
இருப்பினும், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1,21,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.6,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,000 விலை குறைப்பில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். டைட்டானியம் பிளாக், கிரே, வயலெட் மற்றும் எல்லோ ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








