தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.5750 விலை குறைப்பு.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 1 டிபி மெமரி, டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ35 (Samsung Galaxy A35) போனுக்கு முழுதாக ரூ.5750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் சாம்சங் போனை இப்போது பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி ஏ35 விலை (Samsung Galaxy A35 Price): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.5750 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.29,449 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போன்ஸ் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. எஸ்டிஎப்சி மற்றும் ஜே & கே பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும், கோடக் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.6000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.25,249 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். ப்ளூ (Blue), நேவி (Navy) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 போனில் எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள் (Samsung Galaxy A35 Specifications): இந்த சாம்சங் போனில் 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (micro SD Card) சப்போர்ட் வருகிறது. ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் சிம் சிலாட் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) வருகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் வருகிறது. மேலும், 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.
13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP67 டஸ்ட்& வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. இந்த மாடலில் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் வருகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ வருகிறது. பேட்டரியுடன் 8.2 மிமீ தடிமன் மற்றும் 209 கிராம் எடை வருகிறது. இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி வருகின்றன.


Click it and Unblock the Notifications








