பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.27,000 பட்ஜெட்ல OIS கேமரா.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களை மிரளவிடும்படி அமேசான் விற்பனையில் (Amazon Sale) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 10x டிஜிட்டல் ஜூமிங், 1 டிபி மெமரி சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட், 25W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 5G Specifications): இந்த போனில் 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ எச்டிஆர் டிஸ்பிளே (Infinity-O HDR Display) வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொண்டிருக்கிறது. 10x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் வருகிறது. ஆட்டோபோகஸ், ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்டிருக்கிறது.
விடிஐஎஸ் (VDIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வருகிறது. சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) மற்றும் மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 1 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, சிம் சிலாட் (SIM Slot) மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது.
IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் உள்ளது.
விர்ச்சுவல் புரொக்சிமிடி சென்சிங் (Virtual Proximity Sensing) வருகிறது. வழக்கமாக மிட்-ரேஞ்ச் சாம்சங் போன்களில் கொடுக்கப்படும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஒரு ஃபுல் சார்ஜில் 26 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும். பேட்டரி உடன் 209 கிராம் எடை மற்றும் 8.2 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் மற்றும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன. 3 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
ஆகவே, அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue), அவ்சம் லைலாக் (Awesome Lilac) மற்றும் அவ்சம் நேவி (Awesome Navy) கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.27,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இந்த உடனடி டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு (HDFC Bank Credit Card) கிடைக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் பீச்சர்கள் கொண்ட சாம்சங் போன் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








