Home
Mobile

பிளிப்கார்ட் அதிருது.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தள்ளுபடியில் டிரிபிள் ரியர் கேமரா, விஷன் பூஸ்டர் அமோலெட் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 25W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அசத்தலான அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) போன் மலிவாக கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.5 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதோடு 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் விஷன் பூஸ்டர் (Vision Booster) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது.

அதோடு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல ஒன்யுஐ 6.0 (OneUI 6.0) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த சாம்சங் போனில் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

ஆகவே, 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் மிரட்டலான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் வீடியோ டிஸ்பிளே இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (Video Display Image Stabilization) டெக்னாலஜி வருகிறது.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த சாம்சங் போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speakers) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C) போர்ட் வருகிறது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. 5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடலில் ப்ளூ (Blue), லைட் ப்ளூ (Light Blue) மற்றும் ப்ளூ பிளாக் (Blue Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,499ஆகவும் இருக்கிறது.

இதன், 128 ஜிபி மாடலானது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1,500 தள்ளுபடியில் வெறும் ரூ.17,999க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். நல்ல சிப்செட், பேட்டரி மற்றும் ரேம் கொண்ட பக்காவான சாம்சங் போன் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த மாடல் சரியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
9 Percent Discount on Samsung Galaxy A15 5G in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X