மார்கெட் அதிருது.. வெறும் ரூ.18,000 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பட்டாசான தள்ளுபடியில் வெறும் ரூ.18,049 பட்ஜெட்டுக்கு 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 33W சார்ஜிங் போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட ரியல்மி 10 ப்ரோ (Realme 10 Pro) கிடைக்கிறது.
ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள் (Realme 10 Pro Specifications): இந்த ரியல்மி போனில் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ரியல்மி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல ரியல்மி யுஐ 4.1 (realme UI 4.0) ஓஎஸ் கொண்டிருக்கிறது.
இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் வருகிறது. அதோடு 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா ஜிகோ மைக்ரோ ஜிசி02எம்1 (Geco Micro GC02M1) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் ப்ரோலைட் இமேஜிங் டெக்னாலஜி (ProLight Imaging Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, நைட்போட்டோகிராபி அவுட்புட் பக்கா குவாலிட்டியாக இருக்கும்.
இதில் சூப்பர் நைட்ஸ்கேப் மோட் (Super Nightscape Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதற்கு சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பிரீமியமான கேமரா அனுபவத்தை பெறலாம்.

இந்த ரியல்மி 10 ப்ரோ போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதோடு 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் ஹைபிரிட் சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் சைடு பேஸிங் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted fingerprint scanner) வருகிறது. அதேபோல ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) கொடுக்கப்பட்டுள்ளன. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. இந்த போனில் 33W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த ரியல்மி 10 ப்ரோ போனில் ப்ளூடூத் 5.2, வை-பை 6, ஜிபிஎஸ், 5ஜி மற்றும் டூயல் 4ஜி ஆரிய கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் ஹைப்பர்ஸ்பேஸ் கோல்டு (Hyperspace Gold), டார்க் மேட்டர் (Dark Matter), நெபுலா ப்ளூ (Nebula Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.950 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








