Home
Mobile

பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.3,799 ஆஃபர்.. SONY கேமரா.. அண்டர் வாட்டர் ஷூட்.. கிளாஸ் 7i டிஸ்பிளே.. எந்த மாடல்?

வந்த உடனே இப்படி டிஸ்கவுண்ட் கொடுத்தா ஆர்டர் பிச்சிக்காம இருக்குமா என்ன? அப்படினு அடித்து சொல்லும்படி ரூ.3,799 டிஸ்கவுண்ட் போக ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய கேமரா பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படியான பீச்சர்கள் இதில் இருக்கின்றன. அண்டர் வாட்டர் கேமரா, ஏஐ ஸ்டூடியோ போன்ற பீச்சர்களில் சாம்சங், ஆப்பிள் போன்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனின் விலை, டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

ஓப்போ ரெனோ13 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (OPPO Reno13 5G Flipkart Sale): இந்த ஓப்போவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.3,799 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எஸ்பிஐ, ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.3,799 ஆஃபர்.. SONY கேமரா.. வாட்டர் ஷூட்டிங்!

ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தாலும், ரூ.3,799 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,200 விலைக்கு இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். கிட்டத்தட்ட ரூ.4000 டிஸ்கவுண்ட்டில் கிடைப்பதால், விற்பனையும் பட்டையை கிளப்பி வருகிறது. இதற்கு காரணம், இந்த ஓப்போவில் கிடைக்கும் கேமரா பீச்சர்களாக இருக்கிறது. அதை இப்போது பார்ப்போம்.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் அண்டர் வாட்டர் கேமரா கிடைக்கிறது. இதற்காக IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IP69 பிரசர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 1.5 மீட்டர்கள் ஆழம் வரையில் 30 நிமிடங்களுக்கு இந்த ஓப்போ ரெனோ13 5ஜி மூலம் போட்டோ அல்லது வீடியோ எடுக்க முடியும். இதுபோக ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஏஐ ஸ்டூடியோ (AI Studio) கிடைக்கிறது.

இதன் மூலம் ஏஐ ரீஇமேஜ் (AI Reimage), ஏஐ மோஷன் (AI Motion) போன்ற பீச்சர்கள் வருகின்றன. மேலும், ஏஐ போர்ட்ராய்டு, லைவ்போட்டோ, கிளாரிட்டி என்ஹான்சர், எரைசர், அன்பிளர் போன்ற பீச்சர்கள் வாரி வழங்கப்படுள்ளன. மேலும் ஜென்ஏஐ அசிஸ்டன்ட், பீக்கன்லிங்க் மற்றும் லிங்க்பூஸ்ட் போன்ற பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. இப்போது, இதர பீச்சர்களை பார்ப்போம்.

இந்த ஓப்போவில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் டைமன்சிட்டி 8350 எஸ்ஓசி (Octa Core 4nm Dimensity 8350 SoC) சிப்செட் வருகிறது. மூன்று ஓஎஸ் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்கிரேட்களை கொடுக்கிறது. 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே பாதுகாப்பு இருக்கிறது. 1.5K ரெசொலூஷன், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 6.59 (1256 x 2760 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் பேக் செய்துள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கிறது.

50 எம்பி ஆட்டோபோகஸ், ஓஐஎஸ் சப்போர்ட் மெயின் கேமரா + 8 எம்பி ஆட்டோபோகஸ் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர் இருக்கிறது. 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5800mAh பேட்டரி உள்ளது. லுமினஸ் ப்ளூ மற்றும் ஐவரி ஒயிட் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
9 Percent Discount on OPPO Reno13 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X