வெளுக்குது iPhone சேல்.. ரூ.11,000 விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் ஐபோன் 16 (iPhone 16) கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், மார்கெட் விலையில் இருந்து ரூ.11,000 கம்மியாக வாங்கி கொள்ள முடியும். ஓஎல்இடி டிஸ்பிளே, ஐஓஎஸ் 18, 128 ஜிபி மெமரி, 25W சார்ஜிங், 48 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஐபோன் 16 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை குறைப்பு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐபோன் 16 அம்சங்கள் (iPhone 16 Specifications): இந்த ஐபோனில் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கொண்ட 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இதுவொரு எச்டிஆர் (HDR) ரெசொலூஷன் கொண்ட சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, டாப்-எண்ட் அவுட்புட் கிடைக்கும். அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட் மற்றும் 5 கோர் ஜிபியு (5 Core GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஆப்பிள் இன்டலிஜன்ட்ஸ் போன்ற லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஐஓஎஸ் 18 (iOS 18) கிடைக்கிறது. இந்த ஐபோன் 16 போனில் 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பின்னிப்பெடல் எடுக்கும்படி பீச்சர்களை கொடுக்கிறது.
48 எம்பி வைடு-ஆங்கிள் மெயின் கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-shift Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் டால்பி விஷன் (Dolby Vision) ரெசொஷனில் வீடியோ ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். ஆனால், 4K ரெசொலூஷன் வரை ஷூட் செய்ய முடியும்.
இதை சினிமாடிக் மோட் (Cinematic Mode) மூலம் ஷூட் செய்யலாம். மேலும், 2X டெலிபோட்டோ (Telephoto), போட்டானிக் என்ஜின் (Photonic Engine) போன்ற வழக்கமான பீச்சர்கள் கிடைக்கின்றன. 12 எம்பி அல்ட்ரா வைடு (Ultra Wide) கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் மற்றும் மேக்ரோ சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஐபோன் 16 மாடலின் 12 எம்பி செல்பீ ஷூட்டரிலும் டால்பி விஷன் ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், போகஸ் பிக்சல் (Focus Pixel) சப்போர்ட் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) மற்றும் செல்பீ கேமராவில் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) கிடைக்கிறது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22 மணி நேர பேக்கப் கொடுக்கும்படி பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி (Built-in Lithium-ion Battery) கிடைக்கிறது. போகஸ், ஃபிளாஷ் லைட், கேமரா போன்ற கன்ட்ரோல்களுடன் ஆக்சன் பட்டன் (Action Button) கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.79,900ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போது, அமேசான் தளத்தில் ரூ.72,900 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,000 விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால் ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.68,900 விலைக்கு இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.11,000 கம்மியாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








