தூள் பறக்கும் ஆர்டர்கள்.. முதல் முறையாக விற்பனைக்கு வந்த 9 புத்தம் புது போன்கள்.. என்னென்ன மாடல்கள்?
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 9 புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களானது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசானில் நடைபெறும் ப்ரைம் டே விற்பனையின் (Amazon Prime Day Sale) போது வாங்க கிடைக்கின்றன. அந்த 9 புதிய ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் விலை நிர்ணயம் இதோ:
01. ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G): 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.74 இன்ச் சூப்பர்ப்லுயிட் அமோஎல்இடி டிஸ்பிளே, தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான ஐபி54 ரேட்டிங் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஆனது அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது வாங்க கிடைக்கும். இதன் விலை ரூ.33,999 ஆகும்.

02 & 03. ரியல்மி நார்சோ 60 5ஜி சீரீஸ் (Realme Narzo 60 5G Series): ரியல்மி நார்சோ 60 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி ஆகுல இரண்டுமே அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது வாங்க கிடைக்கும். வெண்ணிலா மாடலானது 90ஹேர்ஸ்ட சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படும்.
மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி மாடலானது 120ஹெர்ட்ஸ் கர்வ்டு விஷன் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 5ஜி சிப்செட், 67W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.23,999 முதல் தொடங்குகிறது. 12ஜிபி ரேம் + 1டிபி வேரியண்ட் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.
04. சாம்சங் எம்34 5ஜி (Samsung M34 5G): விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடனான 6.5 இன்ச் அமோஎல்இடி மான்ஸ்டர் டிஸ்ப்ளே மற்றும் 6000mAh பேட்டரி உடன் வரும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 என்கிற அறிமுக விலையின் கீழ் வாங்க கிடைக்கும்
05. டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி (Tecno Camon 20 Premier 5G): இந்த விலைப்பிரிவின் கீழ் 108எம்பி அல்ட்ராவைடு மேக்ரோ லென்ஸ் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.
06 & 07. மோட்டோ ரேஸர் 40 சீரீஸ் (Moto Razr 40 Sereies): மோட்டோ ரேஸர் 40 5ஜி மற்றும் மோட்டோ ரேஸர் 40 அல்ட்ரா 5ஜி ஆகுல இரண்டுமே அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது வாங்க கிடைக்கும். மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா ரூ.89,999 க்கும், மோட்டோரோலா ரேஸ்ர் 40 ஆனது ரூ.59,999 க்கும் விற்பனை செய்யப்படும்.
08. ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி (iQOO Neo 7 Pro 5G): கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன்8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 10-பிட் அமோஎல்இடி டிஸ்பிளே, 120W ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.
09. ஐடெல் ஏ60எஸ் (itel A60s): 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 8எம்பி மெயின் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, யுனிசாக் எஸ்சி9863ஏ1 சிப்செட், 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ள ஐடெல் ஏ60எஸ் ஆனது ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கும். இது 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையாகும்.


Click it and Unblock the Notifications








