NOKIA மண்டியிட்டது.. 70 நிமிடங்கள் சார்ஜ் ஆகும் 8000mAh பேட்டரி போன்.. பல நாள் பேட்டரி லைஃப்.. எந்த மாடல்?
பல நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் மொபைல் போன் என்றாலே நம்மில் பலருக்கும் நோக்கியா (NOKIA) நிறுவனத்தின் மாடல்கள் தான் நினைவிற்கு வரும். ஆனால் அப்படிப்பட்ட நோக்கியா நிறுவனமே மண்டியிடும் படியான ஒரு 8000எம்ஏஎச் பேட்டரி ஸ்மார்ட்போனை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளோம்.
கடந்த நவம்பரில், ரியல்மி நிறுவனம் அதன் உள்நாட்டு (சீன) சந்தையில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்லிம் ஆன (8.55 மிமீ தடிமன்) வடிவமைப்பையும் பெற்றுள்ளது. புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிலிக்கான்-கார்பன் அனோட் பேட்டரி தொழில்நுட்பத்தால் இது சாத்தியமாகிறது.

இது சிலிக்கான் மற்றும் கார்பனை பயன்படுத்தி அதிக ஆற்றல்-அடர்த்தி, நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரியை உருவாக்குகிறது. இதுவே பெரிய சாதனை என்றாலும் கூட, ரியல்மி நிறுவனம் இன்னும் திருப்தி அடையவில்லை என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இந்நிறுவனம் அதன் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்னும் பெரிய பேட்டரியை சோதனை செய்து வருவதாகதகவல் வெளியாகியுள்ளது.
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வெளியாக கிடைத்த தகவலின்படி, ரியல்மி நிறுவனம் அதன் அடுத்த ஜென் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான 3 பேட்டரி விருப்பங்களை பரிசீலித்து வருகிறது. பெரும்பாலும் இது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) மாடலாக இருக்கலாம் .
ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரியை பேக் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் மிகவும் பெரிய பேட்டரி கெப்பாசிட்டி என்பதால் இது சற்றே மெதுவான 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை மட்டுமே பெறும். இதன் விளைவாக இது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்; தோராயமாக 70 நிமிடங்கள் வரை செல்லலாம்!
இது ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முதல் பேட்டரி ஆப்ஷன் ஆகும். இதே ஸ்மார்ட்போனில் 100W பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 7,500mAh பேட்டரியும் இடம்பெறலாம். இந்த "கூட்டணி" பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் ஸ்பீட் ஆகியவைகளுக்கு இடையே சமநிலையை வழங்கும். இதற்கான சார்ஜிங் நேரம் சுமார் 55 நிமிடங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக உள்ள விருப்பம் - 120W பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 7,000mAh பேட்டரி ஆகும். ஒப்பீட்டளவில் இது வேகமான சார்ஜிங்கை வழங்கும்; ஆனால் இந்த விருப்பம், மேலே பார்த்த விருப்பங்களை விட குறைவான பேட்டரி லைஃப்பையே வழங்கும். இந்த விருப்பத்திற்காக சார்ஜிங் நேரம் சுமார் 42 நிமிடங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் எல்லாமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லீக்ஸை அடிப்படையாக கொண்டவை என்பதையும், இது மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
எது எப்படியோ ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பேட்டரி லைஃப் / பேட்டரி செயல்திறன் அடிப்படையில் தனித்து நிற்கும் ஒரு மாடலாக இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே வேண்டாம்
ஆற்றல் திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் போன்ற முன்னேற்றங்களுடன், அடுத்த 2025 ஆம் ஆண்டு அறிமுகமாகும் பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஏற்கனவே பல நாள் பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி இடம்பெறுவது உண்மையாகும் பட்சத்தில்.. இது ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் புரட்டிப்போடும் மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








