கொஞ்சம் காசு, நிறைய அம்சங்கள் : அசத்தும் ஹானர் 5எக்ஸ்.!!

Written By:

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்ட் ஹானர் இந்தியாவில் அதிக பிரபலமாகி விட்டது என்றே கூறலாம். இந்திய சந்தைக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களோடு சரியான விலையை நிர்ணயம் செய்தலே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.

சமீபத்தில் இந்நிறுவனம் மேலும் ஒரு புதிய கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது, ஹானர் 5எக்ஸ் என்ற பெயரில் இந்தியாவில் ரூ.12,999க்கு இந்த கருவி விற்பனை செய்யப்படுகின்றது.

ஹானர் 5எக்ஸ் கருவியின் முந்தைய மாடலான ஹானற் 4எக்ஸ் கடந்த ஆண்டு வெளியானது. அந்த கருவியை அதிகம் மேம்படுத்தி வெளியிடப்பட்டிருக்கும் கருவி தான் ஹானர் 5எக்ஸ்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு

வடிவமைப்பு

மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட ஹானர் 5எக்ஸ் கருவியை அழகாக வெளிப்படுத்துகின்றது. கருவியின் அடி பாகங்கள் பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டாலும் பார்க்க மெட்டல் போன்றே காட்சியளிக்கின்றது.

பிரைட்னஸ்

பிரைட்னஸ்

5.5 இன்ச் எல்சிடி பேனல் மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. சூரிய வெளிச்சம் இடங்களிலும் எவ்வித தடங்களும் இன்றி தெளிவாகவே தெரியும் படி அதன் நிறங்கள் பிரதிபலிக்கின்றன.

பிராசஸர்

பிராசஸர்

ஹானர் 5எக்ஸ் கருவியில் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களுக்கு ஏற்ப கருவி சீராக இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இந்த கருவியின் முக்கிய சிறப்பம்சம் இதன் கைரேகை ஸ்கேனர் தான். கருவியின் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கைரேகை ஸ்கேனர் கருவியை அன்லாக் செய்வது மட்டுமின்றி பல்வித செயல்பாடுகளை வழங்குகின்றது.

மென்பொருள்

மென்பொருள்

ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளம் சார்ந்த EMUI 3.1 கொண்டிருக்கின்றது. மேலும் நேட்டிபிகேஷன் பேனல் வடிவமைப்பு பல்வித அம்சங்களோடு ஷார்ட்கட்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

ஹானர் 5எக்ஸ் கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் டோன் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும் கேமரா ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஹானர் 5எக்ஸ் கருவியானது 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மோடு மூலம் கூடுதலாக பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாங்கனுமா

வாங்கனுமா

கொடுக்கும் விலைக்கு ஹானர் 5எக்ஸ் சிறந்த கருவி என்றே கூற வேண்டும். மெட்டல் வடிவமைப்பு, மற்றும் கைரேகை ஸ்கேனர், பெரிய திரை போன்ற அம்சங்கள் இந்த கருவியை தலைசிறந்த ஒன்று என்பதை நிரூபிக்க தவறவில்லை என்றே கூற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
8 Rock-Solid Reasons to Buy the Honor 5X Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot