Home
Mobile

தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் நோக்கியா 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் winter fest எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போனுக்கு 8 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,395 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 வரை தள்ளுபடி கிடைக்கும்.

தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. 50MP கேமரா.. ஆஃபரில் நோக்கியா 5ஜி போன்..

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதுநோக்கியா ஜி42 5ஜி. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி(Snapdragon 480 Plus 5G) சிப்செட் வதியுடன் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். இந்த போனில் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD)கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் போனில் இடம் பெற்றுள்ளது.

50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

குறிப்பாக நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட கேமரா அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த போனில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant)கொடுக்கப்பட்டுள்ளது.

தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. 50MP கேமரா.. ஆஃபரில் நோக்கியா 5ஜி போன்..

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளன. இந்த நோக்கியா மாடல் கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) நிறங்களில் கிடைக்கும். பின்பு பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
8 percent off on Nokia G42 5G phone on Flipkart: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X