Home
Mobile

டூவல் சிம் கார்டு மொபைல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பு!

By Karthikeyan
டூவல் சிம் கார்டு மொபைல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பு!

நம் நாட்டில் 8 சதவீதம் பேர் இரட்டை சிம் கார்டு வசதிகொண்ட மொபைல்போனை பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீல்சன் நிறுவனம் சமீபத்தில் மொபைல் பயன்படுத்துவோரைப் பற்றி ஒரு ஆய்வு எடுத்தது. அதில், அதாவது 8 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருக்கின்றனர் என்று அந்த சர்வே கூறுகிறது.

குறிப்பாக 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வாழும் இந்திய மாநகரங்களில்தான் அதிகமான பேர் அதாவது 21 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். நகரங்களில் 11 சதவீதம் பேரும், கிராமப் புறங்களில் 9 சதவீதம் பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதாக இந்த சர்வே தெரிவிக்கிறது.

அதிலும் குறிப்பாக 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளையோர்தான் அதிகமாக 45 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இவர்களில் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள்தான் அதிகம்.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவோர் பல்வேறுபட்ட சிம்கார்டு நிறுவனங்களையும், பல்வேறுபட்ட ப்ரீபெய்டு இணைப்புகளையும் விரும்புவதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக சிறிய அளவில் இயங்கும் சிம்கார்டு நிறுவனங்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. எடுத்துக்காட்டாக சந்தையில் 1 சதவீதம் பங்கை மட்டும் வைத்திருக்கும் யுனிநார் நிறுவனம் 6 சதவீதம் பங்கு அளவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருக்கிறது. அதுபோல் ஏர்செல் 7 முதல் 8 சதவீதம் பேரை வைத்திருக்கிறது.

மேலும் டூவல் சிம் வசதியுள்ள மொபைல்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருவதாக இந்த சர்வே கூறுகிறது. குறிப்பாக இந்தியாவில் மொபைல் வைத்திருப்பவர்களில் 61 சதவீதம் பேர் டூவல் சிம் வசதியுள்ள மொபைல்களை வைத்திருக்கின்றனர். இதில் நோக்கியா டூவல் சிம் சந்தையில் முன்னனியில இருக்கிறது. அதாவது 30 சதவீத பங்கை வைத்திருக்கிறது. அதற்கடுத்து சாம்சங் அதாவது 16 சதவீதத்தையும் இறுதியாக மைக்ரோமேக்ஸ் 12 சதவீத பங்கையும் வைத்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X