வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.5600 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 7.58 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் வெளியான விவோ வி40 ப்ரோ (Vivo V40 Pro) போனின் விற்பனையானது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கி இருக்கிறது. முழுதாக ரூ.5600 டிஸ்கவுண்ட் கிடைப்பதால் ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது. இந்த விவோ வி40 ப்ரோவின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
விவோ வி40 ப்ரோ விலை (Vivo V40 Pro Price): இந்த வி40 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 256 ஜிபி மாடலின் விலை ரூ.49,999ஆகவும், 512 ஜிபி மாடலின் விலை ரூ.55,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 256 ஜிபி மாடலுக்கு ரூ.5600 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் 512 ஜிபி மாடலுக்கு ரூ.5000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எச்டிஎப்சி, எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.44999 பட்ஜெட்டில் வாங்கலாம்.
விவோ வி40 ப்ரோ அம்சங்கள் (Vivo V40 Pro Specifications): இந்த விவோவில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் உள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் ZEISS ஆப்டிக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சார் மற்றும் ஆட்டோபோகல் சப்போர்ட் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது.

இந்த விவோ வி40 ப்ரோ போனில் ஆட்டோபோகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ப்ரோ மாடலில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved Display) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. விவோவின் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200பிளஸ் 4என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் வருகிறது.
இந்த சிப்செட்டுடன் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த விவோ வி40 ப்ரோ போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.
அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் வெறும் 7.58 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. அதேபோல 192 கிராம் எடை வருகிறது. 5ஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி வருகிறது. கேங்க்ஸ் ப்ளூ (Ganges Blue) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 6 மாதங்களுக்கான இலவச விபத்து மற்றும் லிக்விட் டேமேஜ் சலுகை கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








