Home
Mobile

இதுதான் டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் அறக்க பறக்கும்படி கிளட்டரிங் பேக் பேனல் மட்டுமல்லாமல், டிரிபிள் ரியர் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பட்ஜெட் பிரியர்களுக்கு பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் இந்த சாம்சங் போனின் விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

இதுதான் டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.31,349 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனை ரூ.31,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைத்தாலும், அதன் பீச்சர்கள் பின்னி எடுக்கின்றன. என்னென்ன பீச்சர்கள்?

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): பிரீமியம் கிளட்டரிங் பேக் பேனல் கொண்ட ஆவ்சம் லாவண்டர் (Awesome Lavender) மற்றும் ஆவ்சம் ஒயிட் (Awesome White) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோக மேட்-பினிஷிங் லைக் ஆவ்சம் பிளாக் (Awesome Black) கலரும் கிடைக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது.

ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser) போன்ற ஏஐ பீச்சர்கள் உள்ளன.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்படுகிறது.

இதுபோக விஷன் பூஸ்டர் (Vision Booster) சப்போர்ட் கிடைக்கிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களை கொடுக்கும் ஒன் யுஐ (One UI 7) உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 6nm) சிப்செட் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 (Super Fast Charge 2.0) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இந்த சாம்சங் போன் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
8 Percent Discount on Samsung Galaxy A36 5G With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X