Home
Mobile

இதுதான் ஆஃபர்.. ரூ.8000 விலை குறைப்பு.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் சம்மர் சேலில் (OnePlus Summer Sale) சோனி சென்சார் கேமரா, 2K அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் 13 (OnePlus 13) போனுக்கு ரூ.3000 நேரடி விலை குறைப்பு மற்றும் ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் சிப்செட் கொண்ட இந்த மிட்-பிரீமியம் ஒன்பிளஸ் போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13 விற்பனை (OnePlus 13 Sale): இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.76,999ஆகவும் இருந்தது. இதுபோக 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆக இருந்தது. இப்போது, ரூ.3000 நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது.

இதுதான் ஆஃபர்.. ரூ.8000 விலை குறைப்பு.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி!

மேலும், ஒன்பிளஸ் சம்மர் சேலில் ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,000 விலை கம்மியாக இப்போது ஆர்டர் செய்யலாம். 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த போனுக்கு கிடைக்கிறது. இப்போது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.61,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பீச்சர்கள் எப்படி இருக்கின்றன?

ஒன்பிளஸ் 13 அம்சங்கள் (OnePlus 13 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் கேமரா போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பார்க்கையில், வழக்கமான கொரில்லா கிளாஸ் அல்லாமல், கிரிஸ்டல் ஷீல்டு சூப்பர் செராமிக் கிளாஸ் புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புரொடெக்சனுடன் 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் முதல் எச்டிஆர்10பிளஸ் வரையில் ஓடிடி பிரியர்களுக்கான பீச்சர்களும் உள்ளன.

இதுதான் ஆஃபர்.. ரூ.8000 விலை குறைப்பு.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி!

4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) மற்றும் அட்ரினோ 830 ஜிபியு ( Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கிடைக்கிறது. கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக உள்ளன.

32 எம்பி செல்பீ ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி808 சென்சாரும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவிலும் சாம்சங் ஜேஎன்1 சென்சாரும் உள்ளன. இதுபோக 50 எம்பி டெலிபோட்டோ கேமராவிலும் சோனி எல்ஒய்டி600 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் 4 மைக்ரோபோன்கள் உள்ளன. மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
8 Percent Discount on OnePlus 13 With 12GB RAM in OnePlus Summer Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X