பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.12000 விலை குறைப்பு.. iPhone 15 பிளஸ் ஆர்டர் அடிச்சு தூக்குது.. இதைவிட்ட இல்ல!
ஐபோன் பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) விற்பனைக்கு வந்துள்ளது. நம்ப முடியாதபடி முழுதாக ரூ.12,000 கம்மி விலையில் இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் கேமரா, ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர், மேக்சேப் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட இந்த ஐபோன் 15 பிளஸ் மாடலின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஐபோன் 15 பிளஸ் அம்சங்கள் (iPhone 15 Plus Specifications): இந்த ஐபோனில் 6.7 இன்ச் (2796 × 1290 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் வருகிறது.

செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு உள்ளது. இந்த ஐபோன் 15 பிளஸ் போனில் சிக்ஸ்-கோர் பயோனிக் ஏ16 4என்எம் (Six-Core Bionic A16 4nm) சிப்செட் வருகிறது. ஐஓஎஸ் 17 (iOS 17) உள்ளது. 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
நானோ மற்றும் ஈசிம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐபோன் 15 பிளஸ் மாடலில் 48 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation), 2எக்ஸ் ஜூம், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) சப்போர்ட் வருகிறது.
டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட எச்டிஆர் (HDR) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 4K எச்டிஆர் கொண்ட சினிமாடிக் மோட் (Cinematic Mode) வருகிறது. ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) சப்போர்ட் உடன் 12 எம்பி ட்ரூடெப்த் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) உள்ளது.

மேலும், எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங், டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. இந்த ஐபோன் 15 பிளஸ் மாடலில் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. 15W மேக்சேப் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 26 ஹவர்ஸ் வீடியோ பிளேபேக் பெற்று கொள்ளலாம்.
7.80 மிமீ தடிமன் மற்றும் 201 எடை வருகிறது. இந்த ஐபோன் 15 பிளஸ் போனில் பிங்க் (Pink), யெல்லோ (Yellow), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்திய மார்கெட்டில் இந்த போன் அறிமுகமானபோது, இதன் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வெறும் ரூ.81,999 பட்ஜெட்டில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதுபோக ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஐபோன் 15 பிளஸ் போனை வெறும் ரூ.77,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








