Home
Mobile

மார்ச் 4-7.. 4 நாட்களில் 8 புதிய போன்கள் அறிமுகம்.. Samsung முதல் Xioami வரை.. என்னென்ன மாடல்கள்? என்ன விலை?

கொச கொசவென புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து தள்ளிய எம்டபிள்யூசி 2024 (Mobile World Congress) நிகழ்வு ஒருவழியாக முடிவடைந்தது, ஆகையால் அடுத்த சில வாரங்களுக்கு எந்த புதிய ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகாது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு!

அடுத்த வாரம்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மார்ச் 4 முதல் மார்ச் 7 ஆம் தேதிக்கு மொத்தம் 6 பிராண்டுகள் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களை (New Smartphones) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளன. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

மார்ச் 4-7.. 4 நாட்களில் 8 புதிய போன்கள் அறிமுகம்!

மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எப்15 (Samsung Galaxy F15): சாம்சங்கின் இந்த புதிய மாடல் மார்ச் 4 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதில் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரி, 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறும். இந்திய சந்தையில் இது ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 5 ஆம் தேதி அறிமுகமாகும் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): நத்திங்கின் இந்த படஜெட்-விலை மாடல் மார்ச் 5 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதில் டைமென்சிட்டி 7200 ப்ரோ சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளுயிட்ட அம்சங்கள் இடம்பெறலாம். இந்திய சந்தையில் இது ரூ.25,000 - ரூ.30,00 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 4-7.. 4 நாட்களில் 8 புதிய போன்கள் அறிமுகம்!

மார்ச் 5 ஆம் தேதியன்று அறிமுகமாகும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G): லாவாவின் இந்த புதிய மாடல், மார்ச் 5 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 64 மெகாபிக்சல் மெயின் சோனி சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 6 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மி 12 சீரீஸ் (Realme 12 Series): ரியல்மி 12 மற்றும் ரியல்மி 12 பிளஸ் மாடல்கள் மார்ச் 6 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த சீரிஸில் அமோஎல்ஓடி டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 67W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களை எதிர்பார்க்கலாம். பிளஸ் மாடலின் விலை ரூ.20,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 4-7.. 4 நாட்களில் 8 புதிய போன்கள் அறிமுகம்!

மார்ச் 7 ஆம் தேதி அறிமுகமாகும் விவோ வி30 சீரீஸ் (Vivo V30 series): விவோ வி30 மற்றும் விவோ வி30 ப்ரோ மாடல்கள் மார்ச் 7 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இரண்டுமே 120ஹெர்ட்ஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ZEISS ரியர் மெயின் கேமரா, 50எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட அம்சங்களை வழங்கும். இந்த சீரீஸ் ரூ.30,000 - ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

மார்ச் 7 ஆம் தேதி அறிமுகமாகும் ஷாவ்மீ 14 (Xiaomi 14): ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் மாடல் மார்ச் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC), ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) லைக்கா (Leica) பிராண்டிங் கேமரா செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் இது ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
8 new smartphones launching in india between march 4 to 7 check model price specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X