Home
Mobile

எந்த போன் வாங்குறதா இருந்தாலும் ஏப்.23 க்கு அப்புறம் பார்க்கலாம்.. Realme-யின் முரட்டு போன்.. என்ன மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று ஒரு முரட்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு உடனான ஒரு பெரிய 7,200mAh பேட்டரியை கொண்ட ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனாகும்

சீன அறிமுகத்தை தொடர்ந்து இது இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இது 7,200mAh என்கிற பெரிய அளவிலான பேட்டரி யூனிட் உடன் வரும் என்பதை உறுதி செய்த கையோடு, தற்போது ஜிடி 7 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த போன் வாங்குறதா இருந்தாலும் ஏப்.23 க்கு அப்புறம் பார்க்கலாம்!

ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆனது கிராஃபீன் ஐஸ் (ப்ளூ), கிராஃபீன் ஸ்னோ (ஒயிட்) மற்றும் கிராஃபீன் நைட் (பிளாக்) ஆகிய 3 கலர்களில் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்ப்பதற்கு இது ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டோன்டு டவுன் வெர்ஷனை போல தோன்றுகிறது. குறிப்பாக, ப்ளூ கலர் ஆப்ஷனில் ரெட் கலர் பவர் பட்டன் மற்றும் கேமரா ஐலேண்ட்-ஐ சுற்றி ரெட் கலர் அஸென்ட்கள் உள்ளன.

ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- பிஓஇ-ஆல் தயாரிக்கப்பட்ட ஓஎல்இடி பேனல்
- 1.5கே ரெசல்யூஷன்
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ஓஐஎஸ் ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்

- 100W வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- பெரிய 7,200mAh பேட்டரி
- ஐபி68 / ஐபி69 ரேட்டிங்
- அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- எடையில் 203 கிராம்
- 8.25 மிமீ ஸ்லிம் டிசைன்
- விலை ரூ.35,000 - ரூ.40,000 க்குள் இருக்கலாம்.

முன்னதாக அறிமுகமான ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்
- 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 100% டிசிஐ-பி3 கலர் கேமட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம்
- 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார்
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5500mAh பேட்டரி

ஐக்யூ நிறுவனம் 7300mAh பேட்டரி உடன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வேகத்தில், ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி 7 ஸ்மார்ட்போனில் 7200mAh பேட்டரியை உறுதி செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஷாவ்மீ நிறுவனமும் கூட அதன் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் 7000mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஹானர் நிறுவனம் 8000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அது ஹானர் பவர் ஸ்மார்ட்போனாக இருக்கலாம். மேற்கண்ட எல்லா "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகும் அல்லது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
200mAh Battery Phone Realme GT 7 Slim Design color Options Revealed Ahead April 23 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X