Home
Mobile

ரூ.13000 க்கு பட்டைய கிளப்பும் புது Realme போன்.. 5ஜி, 7000mAh டைட்டன் பேட்டரி, IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன் பிராண்டுகளுமே (மெமரி பற்றாக்குறை காரணமாக) தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி வரும் வேளையில், ரியல்மி (Realme) நிறுவனமானது "தொடர்ச்சியாக" பட்ஜெட் விலையில் புதிய 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்து வருகிறது.

தாய்லாந்தில் ரியல்மி சி100 5ஜி (Realme C100 5G) மாடல் அறிமுகம் செய்த சில நாட்களில் ரியல்மி நிறுவனமானது பேட்டரி லைஃப் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அம்சங்களுடன் ரியல்மி சி100 4ஜி (Realme C100 4G) ஸ்மார்ட்போனை வியட்நாமில் அறிமுகம் செய்தது.

ரூ.13000 க்கு பட்டைய கிளப்பும் புது Realme போன்.. 5ஜி, 7000mAh பேட்டரி

இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகமானது வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதி செய்துள்ளது. இது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள்: மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே இது நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வரும் மாடலாக இருக்கும். அதாவது இது ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை 5ஜி சீரீஸில் இடம்பெறு. ஆனால் இந்த முறை - 5ஜி இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் ஆக இருக்காது; மாறாக பேட்டரி தான் ஹைலைட் ஆக இருக்கும்

ஏனென்றால் இந்த போனில் 7000mAh பேட்டரி இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி இதை "டைட்டன் பேட்டரி" என்று அழைக்கிறது. இது ஆறு ஆண்டுகள் வரை பேட்டரி ஹெல்த்தை (Battery Health) தக்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது. இது ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, எனவே மற்ற டிவைஸ்ங்களை சார்ஜ் செய்யவும் இதை பயன்படுத்தலாம்.

இந்த போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 5300மிமீ² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமையும் (vapor chamber cooling system) கொண்டுள்ளது. ரியல்மியின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் நான்கு ஆண்டுகள் வரை சீரான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வெளிப்புறங்களில் சிறந்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்யலாம்.

இதன் பேக் பேனல், ஒரு டெக்ஸ்சர்டு ஃபினிஷ், செங்குத்தான கேமரா செட்டப் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. கேமரா செட்டப்பில் 13எம்பி ரியர் கேமரா உள்ளது. இந்த போன், தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் திறனுக்காக IP64 ரேட்டிங்கை பெற்றுள்ளதுடன், கூடுதல் நீடித்துழைப்பிற்காக ஆர்மர்ஷெல் பாதுகாப்புடனும் வருகிறது.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தண்டர் பிளாக் மற்றும் ஃப்ராஸ்ட் சில்வர் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதும், இது அறிமுகத்திற்கு பிறகு அமேசான் இந்தியா (Amazon India), ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஃப்லைன் கடைகளின் வழியாக விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ன விலைக்கு வரும்? லீக்ஸ் விவரங்களின்படி ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 64ஜிபி, 4ஜிபி ரேம் + 128ஜிபி, மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். விலை ரூ.13,000 க்கு கீழ் தொடங்கி, டாப் வேரியண்ட்டிற்கு சுமார் ரூ.15,000 வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து மற்றும் வியட்நாமில் அறிமுகமான ரியல்மி சி100 5ஜி மற்றும் 4ஜி மாடல்களும் கூட இந்திய சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதைக்கு ரியல்மி இந்தியாவின் கவனம் - நார்சோ 100 லைட் 5ஜி மீது மட்டும் இருக்கும். மேற்கண்ட மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான தகவல்கள் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
7000mAh Titan Battery Realme Narzo 100 Lite 5G Price Leaked Ahead India Launch on April 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X