இதுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. அதிரடி விலை.. 7000mAh, 16GB ரேம், 200MP கேம் உடன் புதிய Redmi 5ஜி போன்!
ஷாவ்மீ நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி (Redmi) இந்த ஆண்டின் இறுதிக்குள் பரபரப்பாக சில முக்கிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான அதன் "நோட்" சீரிஸின் கீழ் புதிய ரெட்மி நோட் 15 சீரீஸ் மாடல்கள் எப்போது அறிமுகமாகும், எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விவரங்கள் லீக் ஆகியுள்ளன.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ரெட்மி நோட் 15 சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) ஆகிய 2 மாடல்களும் 2025 டிசம்பரில் அறிமுகமாகும் மற்றும் முதல் விற்பனை ஜனவரி 9, 2026 அன்று தொடங்கும்.

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இந்திய வேரியண்ட்கள் ஆனது சீனாவில் அறிமுகமான மாடல்களில் உள்ள அதே அம்சங்களுடன் அறிமுகமாகும். இருப்பினும், இந்தியாவிற்கு வரும் மாடல்களில் உள்ள கேமரா செட்டப் ஆனது சீன மாடல்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் "புதிய" 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்னி நோட் 15 ப்ரோ மாடலில் 108 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்படலாம். ஆனாலும் இந்த இரண்டு போன்களும் சீன வேரியண்ட்களில் உள்ள அதே சிப்செட் மற்றும் அதே டிஸ்பிளேவை தான் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம்.
மேலும் இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில் சில வேறுபாடுகளை காணலாம்: அதாவது ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.
ரெட்மி நோட் 15 சீரீஸ் விலை நிர்ணயம் எப்படியிருக்கும்? ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 - ரூ.28,000 என்கிற பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்
ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் இருக்க ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதை உறுதிப்படுத்தும்படி, ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்மற்றும் அவைகளின் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் சமீபத்தில் லீக் ஆகின.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் கூற்றுப்படி, ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த விலையை ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட்டு பார்த்தால், சுமார் ரூ.1,500 விலை உயர்வு இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். அவைகள் முறையே ரூ.12,500 மற்றும் ரூ.14,500 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது. இதுவொன்றும் இறுதி விலை இல்லை என்பதால், அதிகாரப்பூர்வ விலை சற்று முன்-பின் இருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








