7000mAh பேட்டரி.. OnePlus சாம்பிராஜ்யத்தை புரட்ட போகும் 4 புது 5ஜி போன்கள்.. எந்தெந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்த நிலையில், இந்நிறுவனத்தின் அடுத்த 4 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த 4 மாடல்களுமே 6500எம்ஏஎச் - 7000எம்ஏஎச் சிங்கிள் செல் பேட்டரி (6500mAh - 7000mAh Single cell battery) உடன் வரும் என்கிற தகவல் வெளியாகி ஸ்மார்ட்போன் ஆர்வலர்களையும், ஒன்பிளஸ் ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் பேக் செய்யப்பட்டுள்ள 6000mAh பேட்டரியே பலரையும் 'ஷாக்' ஆக்கியுள்ள நிலையில், அடுத்துவரும் 4 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே 7000mAh பேட்டரியுடன் வரும் என்று கூறினால் யார் தான் ஆச்சரியப்பட மாட்டார்கள்? அதென்ன மாடல்கள்? அவைகள் எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? 6500எம்ஏஎச் - 7000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுவது ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5), ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro), ஒன்பிளஸ் ஏஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களாகும். இதில் ஒன்பிளஸ் ஏஸ் 5, இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆக அறிமுகமாகும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இந்த 4 மடல்களில் ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரீஸ் மாடல்கள் ஆனது டிசம்பர் 2025 இல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி விரவங்கள்: நம்பகமான சீன டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக,ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் (OnePlus Ace 5 Series) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரீஸின் (OnePlus Ace 5 Series) பேட்டரி விவரங்களை லீக் ஆகியுள்ளன.
அதன்படி ஒன்பிளஸ் ஏஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6,500mAh வரையிலான பேட்டரி பேக் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரிஸ் ஆனது 7,000mAh பேட்டரியை பெறலாம். இதற்கிடையில் வரும் ஒன்பிளஸ் ஏஸ் 6வி (OnePlus Ace 6V) மாடல் ஆனது 5,750mAh பேட்டரியை பேக் செய்ய வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78 இன்ச் டிஸ்பிளே, 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் போன்றவைகளை கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் 13ஆர்-ல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் செக்கண்டரி சென்சார் + 2 மெகாபிக்சல் ஷூட்டர் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியுடன் அனுப்பப்படலாம்
சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 ஆக அறிமுகமாகி இந்தியாவிற்கு ஒன்பிளஸ் 13ஆர் ஆக வரும் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு இங்கே அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications