விட்ராதீங்க ப்ரோ.. ரூ.2,000 ஆஃபர் ரேட்ல 7000mAh பேட்டரி Moto போன்.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் ஆஃபரில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளேவை கொடுப்பதால், இந்த தள்ளுபடியில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பேங்க் தள்ளுபடி மட்டுமல்லாமல், நேரடி தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு 34 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.32,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

ஆகவே, ரூ.30,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ விருப்பத்தில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு ரூ.3,550 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இந்த விருப்பத்தில் வாங்கும்பட்சத்தில் ரூ.29,449 விலையில் பெற்று கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் உள்ளது.
இந்த மாடலின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. ரூ.2,000 தள்ளுபடி போக ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கும் ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ விருப்பங்களும் இந்த மாடல்களுக்கு உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுக்கும் 6.78 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே உள்ளது. 2772 x 1272 பிக்சல்களுடன் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிசைனில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருவதால், டிஸ்பிளே அனுபவம் பிரீமியமாக இருக்கும். தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன.
4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளன. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எப்/1.8 அபெர்சர், சோனி எல்ஒய்டி710 (SONY LYT710) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (Optical Image Stabilization) 50 எம்பி மெயின் கேமரா + எப்/2.2 அபெர்சர், மேக்ரோ ஆப்ஷனுடன் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
மோட்டோ மாடல்களுக்கு வழக்கமாக கிடைக்கும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். முன்பக்கத்தில் எப்/2.2 அபெர்சர், 4K ரெக்கார்டிங்குடன் 32 எம்பி கேமரா கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் கொடுக்கிறது.
7.99 எம்எம் தடிமனுடன் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 193 கிராம் எடை வருகிறது. MIL STD-810H சர்டிபிகேஷன் உள்ளது. பேன்டேன் ஓரியண்ட் ப்ளூ, பேன்டோன் ஸ்போர்ட்டிங் கிரீன் மற்றும் பேன்டோன் சில்ஹவுட் ஆகிய கலர்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications