Subscribe to Gizbot

ஆண்ட்ராய்டு போன்களால் செய்ய முடியாத 7 விடயங்கள், ஐபோன்கள் செய்யும்.!

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐஓஎஸ் 11 இயங்குதளத்தின் பப்ளிக் பீட்டா வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்கள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐஓஎஸ் இயக்க முறைமையை சோதிக்கலாம் என்று அர்த்தம்.

ஆண்ட்ராய்டு போன்களால் செய்ய முடியாத 7 விடயங்கள், ஐபோன்கள் செய்யும்.!

நிறுவனத்தின் பிரபலமான ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களுக்கு சக்தியூட்டும் ஆப்பிள் ஐஓஎஸ் இயக்க முறைமையின் அனைத்து புதிய ஐஓஎஸ் 11 ஆனது - ஒரு புதிய மறுவடிவமைப்பு கட்டுப்பாட்டு மையம், கேமரா சுத்திகரிப்பு, சிறந்த மல்டி-பணி மற்றும் இன்னும் பல புதிய அம்சங்களுடன் வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வீழ்த்துமா.? பின்தள்ளுமா.?

வீழ்த்துமா.? பின்தள்ளுமா.?

சரி, இந்த முறையாவது ஆப்பிளின் ஐஓஎஸ் ஆனது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தை வீழ்த்துமா.? பின்தள்ளுமா.? என்று பார்த்தால் - கிட்டத்தட்ட "ஆம்" என்பது போல்தான் தெரிகிறது. அப்படியென்ன சிறப்பான அம்சங்களை ஐஓஎஸ் 11 கொண்டுள்ளது.?

ஸ்பேம் மெஸேஜ் பில்டர்

ஸ்பேம் மெஸேஜ் பில்டர்

ஐஓஎஸ் 11 இயங்குதளத்தின் மிக முக்கியமான புதிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஓஎஸ் பற்ற விவரிக்கும் போது, ஸ்பேம் செய்திகளை வடிகட்ட செய்திகள் பயன்பாட்டின் திறன் சேர்ப்பு பற்றி ஆப்பிள் பேசுகிறது. இது சாத்தியமானால் ஆண்ட்ராய்டு ஐபோன்களை விட பல படிகள் பின்தங்கும்.

நெட்டிவ் ஸ்க்ரீன் ரெக்கார்டிங்

நெட்டிவ் ஸ்க்ரீன் ரெக்கார்டிங்

ஆம். ஐஓஎஸ் 11 பயனர்கள் வெளிப்புற குரல் உள்ளீடு மூலம் சாதனத்தின் டிஸ்பிளேவில் உள்ள உள்ளடக்கங்களை பதிவு செய்ய முடியும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி கிப்களையும் உருவாக்கவும் முடியும். இந்த ஸ்கிரீன் பதிவு அம்சம், சாம்சங் ஸ்மார்ட்போன்களில் துணைபுரிந்தாலும் அது ஆண்ட்ராய்டில் ஒரு சொந்த அம்சமாக இன்னும் மாறவில்லை.

கருவிகளுக்கு இடையிலேயான மெஸேஜ் சின்க்

கருவிகளுக்கு இடையிலேயான மெஸேஜ் சின்க்

மேம்படுத்தப்பட்ட ஐ ஓஎஸ் 11-ன் கீழ் செய்திகள் பயன்பாட்டிற்கு இப்போது ஐக்ளவுட் ஆதரவு உள்ளது. அதாவது இது ஒரே ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்தி அனைத்து ஆப்பிள் சாதனங்களுக்கும் இடையே இணைப்பை உருவாக்கவும், அனைத்து செய்திகளையும் சின்க் செய்யவும் உதவும். கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செய்திகள் பயன்பாட்டிற்கு இன்னும் இந்த அம்சம் இல்லை.

மெஸேஜ் வழியாக பணப்பரிமாற்றம்

மெஸேஜ் வழியாக பணப்பரிமாற்றம்

ஐஓஎஸ் 11-இன் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் செய்திகள் பயன்பாட்டின் வழியாக நேரடியாக பணத்தை அனுப்ப மற்றும் பெற முடியும். பயனர்கள் எளிய உரை செய்திகளின் வழியாகவே இதை செய்ய முடியும். ஒருவரின் வங்கிக்கணக்கிற்கும் பணத்தை அனுப்ப முடியும். ஆண்ட்ராய்டில் இப்போது இதுபோன்ற எந்த செயல்பாடு இல்லை, ஒருவேளை வாட்ஸ்ஆப் மூலம் தற்போதைக்கு இது சாத்தியமாகலாம்.

சிரியின் ரியல் டைம் மொழிபெயர்ப்பு

சிரியின் ரியல் டைம் மொழிபெயர்ப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri) ஆனதும் ஐஓஎஸ் 11-இல் மேம்படுத்தப்பட்டுள்ளது. உரையாடல்களின் போது, இந்த ஆப்பிள் குரல் அடிப்படையிலான உதவியாளர் இப்போது நிகழ்நேரத்தில் மொழிகளை மொழிபெயர்க்கும் திறன் கொண்டுள்ளது. இப்போது இந்த அம்சம் ஆங்கிலம் மொழிபெயர்ப்புகளுக்கான ஐந்து மொழிகளுக்கு - சீன, பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் - ஆதரவளிக்கிறது.

கருவிகளை அருகருகே வைப்பதின் மூலம் மிகவும் எளிமையான செட்-அப்

கருவிகளை அருகருகே வைப்பதின் மூலம் மிகவும் எளிமையான செட்-அப்

பயனர்கள் ஒரு பழைய ஐஓஎஸ் சாதனத்தை, புதிய சாதனத்தின் அருகே வைப்பதின் வழியாக மிகவும் எளிமையான முறையில் புதிய கருவியை செட்-அப் செய்யும் வசதியை ஐஓஎஸ் 11 வழங்குகிறது. ஆப்பிளின் இந்த அம்சத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும் கூட இது ஆண்ட்ராய்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு அம்சமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

ட்ராக் அண்ட் ட்ராப் ஆதரவு

ட்ராக் அண்ட் ட்ராப் ஆதரவு

புதிய ஐஓஎஸ் 11 ஆனது படங்கள், உரை, பயன்பாடுகளின் யூஆர்எல் ஆகியவைகளை எளிதாக ட்ராக் அண்ட் ட்ராப் செய்யும் உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம், ஐபாட்களில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. ரீடிசைன்டு ஆப் ஸ்விட்சர் பேனல் மூலம் (redesigned app switcher panel) பயனர்கள் இதை நிகழ்த்தலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
7 things that iPhones can do, Android phones can't. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot