4ஜி, 5ஜி போன்களின் விலைகளை உயர்த்திய Samsung.. ஒரே நேரத்தில் எகிறியது 7 Galaxy போன்களின் விலை!
இந்தியாவில், சாம்சங் (Samsung) நிறுவனம் ஏழு கேலக்ஸி (Galaxy) ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை மாற்றம் கேலக்ஸி ஏ (Galaxy A), கேலக்ஸி எப் (Galaxy F) மற்றும் கேலக்ஸி எம் (Galaxy M) ஆகிய சீரீஸ்களில் உள்ள குறிப்பிட்ட மாடல்களை பாதிக்கிறது; மேலும் இது ஜூலை 4 முதல் அமலுக்கு வந்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் இப்போது சாம்சங் இந்தியா இணையதளத்தில் காணப்படுகின்றன; தற்போது பல்வேறு வேரியண்ட்களில், சில்லறை விற்பனை விலை ரூ.1,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு வழக்கமான அதே காரணம் தான் - மெமரி சிப் (memory chip) விலை உயர்வு காரணமாகவே இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக கருதப்படுகிறது.

எந்தெந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலைகள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது? கேலக்ஸி ஏ06 5ஜி (Galaxy A06 5G), கேலக்ஸி ஏ07 (Galaxy A07), கேலக்ஸி ஏ07 5ஜி (Galaxy A07 5G), கேலக்ஸி ஏ17 5ஜி (Galaxy A17 5G), கேலக்ஸி எப்17 5ஜி (Galaxy F17 5G), கேலக்ஸி எப்07 (Galaxy F07) மற்றும் கேலக்ஸி எம்07 (Galaxy M07) ஆகிய மாடல்களின் விலைகள்உயர்த்தப்பட்டுள்ளன
லீக் ஆன ஆவணத்தின்படி, 4GB + 64GB கொண்ட Galaxy A07-ன் விலை இப்போது ரூ.10,999-லிருந்து ரூ.11,999-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Galaxy A07 5G-யின் 4GB + 128GB மாடல் இப்போது ரூ.16,999-லிருந்து ரூ.17,999-ஆகவும், 6GB + 128GB மாடல் ரூ.18,999-லிருந்து ரூ.19,999 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
4GB + 64GB கொண்ட Galaxy A06 5G-யின் விலை இப்போது ரூ.13,999-லிருந்து ரூ. 14,999 ஆகவும், 4GB + 128GB மாடலின் விலை ரூ.15,999-லிருந்து ரூ. 16,999 ஆகவும் உயர்ந்துள்ளது. 6GB + 128GB மாடலின் விலை முன்பு ரூ.17,999 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4GB RAM + 64GB ஸ்டோரேஜ் கொண்ட Galaxy M07 மற்றும் Galaxy F07 ஆகிய மாடல்களின் விலையையும் சாம்சங் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இவ்விரு மாடல்களின் விலையும் முன்பு ரூ.10,399 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.11,399 ஆக உயர்ந்து உள்ளது.
Galaxy A17 5G மாடலின் அனைத்து வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது; இதில் 6GB + 128GB மாடல் முன்பு ரூ.22,499-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.23,499 க்கு கிடைக்கிறது. 8GB + 128GB மாடலின் விலை ரூ.24,499-லிருந்து ரூ.25,499 ஆகவும், 8GB + 256GB மாடலின் விலை ரூ.28,999-லிருந்து ரூ. 29,999 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோன்று Galaxy F17 5G-யின் அனைத்து வகைகளின் விலையையும் சாம்சங் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 4GB + 128GB மாடலின் விலை ரூ.18,999-லிருந்து ரூ.19,999 ஆக உயர்ந்துள்ளது. 6GB + 128GB மாடல் முன்பு ரூ.20,999-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.21,999-ஆகவும், 8GB + 128GB மாடல் ரூ.22,999-லிருந்து ரூ.23,999 ஆகவும் விலை மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த விலை மாற்றம் குறித்த தகவலை சாம்சங் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தியாவில் இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட்போன் விலை உயர்வுகளுக்கு மெமரி சிப் (memory chip) விலையேற்றம் காரணமாக கூறப்பட்டிருந்தது; இருப்பினும், தற்போதைய விலை உயர்வுக்கும் அதே காரணம்தான் உள்ளதா என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் திருத்தப்பட்ட சில்லறை விற்பனை விலைகள் சாம்சங் இந்தியா (Samsung India) இணையதளத்தில் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications