மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.6,399 கட்.. 3D டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்களை கொண்ட விவோ எக்ஸ்100 (Vivo X100) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) மூக்கில் விரல் வைக்கும்படியான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
விவோ எக்ஸ்100 அம்சங்கள் (Vivo X100 Specifications): இந்த விவோ போனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்920 விசிஎஸ் பயோனிக் (Sony IMX920 VCS Bionic) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) வருகிறது. இந்த டெலிபோட்டோ கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது.
அதோடு 100X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ZEISS ஆப்டிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த விவோ எக்ஸ்100 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. அதோடு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9300 4என்எம் எஸ்ஓசி (Octa-Core Dimensity 9300 4nm SoC) சிப்செட் வருகிறது.
கேமிங் பிரியர்களை மிரளவிடும் விதமாக இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.

இந்த விவோ எக்ஸ்100 போனில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Fi Audio) ஆகிய சப்போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் வருகிறது.
இந்த போனில் 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), நாவ்ஐசி (NavIC) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. அதோபோல 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆஸ்ட்ராய்டு பிளாக் (Asteroid Black) மற்றும் ஸ்டார்ட்ரெயில் ப்ளூ (Startrail Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விவோ எக்ஸ்100 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டில் விலை ரூ.63,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது.
எச்டிஎப்சி, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு முழுதாக ரூ.6,399 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த விவோ எக்ஸ்100 போனின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.57,600 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பக்கா பிரீமியம் போனை மிரட்டலான தள்ளுபடியில் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த ஆஃபர் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








