செய்கைனா இதுதான்.. முழுசா ரூ.6000 விலை குறைப்பு.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் 50 எம்பி ஓஐஎஸ் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 1 டிபி மெமரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55) போன் கிடைக்கிறது. ரூ.42,999 பட்ஜெட் கொண்ட இந்த போன் வெறும் ரூ.36,999 விலையில் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எப்படி?
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.42,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.6,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதே கார்டு மூலம் ஈஎம்ஐயில் ஆர்டர் செய்தால், ரூ.6,750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இதுபோக ரூ.40,849 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கும் ரூ.6000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனை இதுவரையில் கிடைக்காத மலிவான விலைக்கு ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன?
சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 Specifications): இந்த ஏ55 மாடலில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் மற்றும் பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) உள்ளது.
4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.
இதுபோக 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD Card) சிலாட் வருகிறது. கூடவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) சிலாட் வருகிறது. இந்த ஏ55 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் வருகிறது.
50 எம்பி மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் 5ஜி எஸ்ஐ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue)மற்றும் அவ்சம் நேவி (Awesome Navy) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








