மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

|

ஓப்பன் ஆக சொல்ல வேண்டும் என்றால்.. மோட்டோரோலா (Motorola) ஒன்றும் அவ்வளவு மோசமான பிராண்ட் அல்ல!

ஒன்பிளஸ், விவோ, ரியல்மி, ஒப்போ, போக்கோ போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை போல பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் கூட..

மோட்டோரோலா இப்போது மட்டுமல்ல.. எப்போதுமே மொபைல் போன் துறையின் ஒரு முன்னோடி தான்; தனக்கான விசுவாசமான பயனர்களை, வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஒரு பிராண்ட் தான்!

இதுதான் சரியான நேரம்!

இதுதான் சரியான நேரம்!

ஒருவேளை நீங்களும் ஒரு 'மோட்டோரோலா லவ்வர்' என்றால் அல்லது "இனிமேல் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை வாங்கினால் என்ன?" என்கிற எண்ணத்தில் இருந்தால்.. இதுதான் சரியான நேரம்!

ஏனென்றால்.. சில பிரபலமான மோட்டோ ஸ்மார்ட்போன்கள் மீது, முன்னெப்போதும் கிடைக்திராத அளவிலான சலுகைகள் மற்றும் தள்ளுபகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

என்னென்ன மோட்டோ போன்கள் மீது, என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன? இந்த சலுகை எதன் வழியாக அணுக கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

நம்ப முடியாத ஆபர்கள்!

நம்ப முடியாத ஆபர்கள்!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இ, மோட்டோ ஜி மற்றும் மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ் மாடல்களின் மீது நம்ப முடியாத ஆபர்களை அறிவித்துள்ளது.

மோட்டோரோலாவின் இந்த ஆபர், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டின் 2022 பிக் பில்லியன் டே விற்பனையின் போது அணுக கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2022 ஆனது வருகிற செப்.23 முதல் தொடங்குகிறது.

01. மோட்டோ ஜி62 5ஜி மீதான சலுகைகள்:

01. மோட்டோ ஜி62 5ஜி மீதான சலுகைகள்:

இது மோட்டோரோலாவின் மிகவும் பிரபலமான 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இந்த விலை பிரிவின் வாங்க கிடைக்கும் மிகவும் போட்டித்தன்மை மிக்க 5ஜி ஸ்மார்ட்போனும் கூட!

120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் உடன் வரும் Moto g62 5G ஸ்மார்ட்போன் ஆனது பிக் பில்லியன் டே விற்பனையின் போது வெறும் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்!

அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

02. மோட்டோ ஜி32 5ஜி மீதான சலுகைகள்:

02. மோட்டோ ஜி32 5ஜி மீதான சலுகைகள்:

இது தாறுமாறாக விற்பனையாகும் மோட்டோரோலாவின் ஒரு ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன் ஆகும்.

90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான FHD+ டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 50MP குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளிட்ட நம்பமுடியாத அம்சங்களை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் விற்பனையின் போது வெறும் ரூ. 9,899 க்கு வாங்க கிடைக்கும்!

03. மோட்டோ இ40 மீதான சலுகைகள்:

03. மோட்டோ இ40 மீதான சலுகைகள்:

மோட்டோ இ40 ஆனது, மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கும் மோட்டோரோலாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.

90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 6.5-இன்ச் அளவிலான IPS LCD டிஸ்பிளே, 48MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் பெரிய 5000mAh பேட்டரி மற்றும் யுனிசாக் டி700 ப்ராசஸர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டில் நடக்கும் சிறப்பு விற்பனையின் போது வெறும் ரூ.8,099 (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கும்!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

04. மோட்டோ ஜி52 மீதான சலுகைகள்:

04. மோட்டோ ஜி52 மீதான சலுகைகள்:

மோட்டோ ஜி52 ஆனது வெறும் 7.99 மிமீ மெல்லிய மற்றும் 169 கிராம் எடை கொண்ட ஒரு லைட்-வெயிட் ஸ்மார்ட்போன் ஆகும்.

'கிளாஸ்' ஆன டிசைன், வித்தியாசமான pOLED டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், நல்ல பெர்ஃபார்மென்ஸ்-ஐ உறுதி செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி+64ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.12,599 மற்றும் ரூ.13,499 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கும்!

05. மோட்டோ ஜி82 5ஜி மீதான சலுகைகள்:

05. மோட்டோ ஜி82 5ஜி மீதான சலுகைகள்:

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படும், 13 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவை பேக் செய்யும் மோட்டோ ஜி82 5ஜி மீதும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பிளிப்கார்ட்டின் பிபிடி 2022 விற்பனையின் போது ரூ.18,499 முதல் வாங்க கிடைக்கும்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

கடைசியாக,2 புதிய ஸ்மார்ட்போன்களின் மீதும் ஆபர்!

கடைசியாக,2 புதிய ஸ்மார்ட்போன்களின் மீதும் ஆபர்!

அது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் ஆகும்.

உலகின் முதல் 200MP கேமராவை பேக் செய்யும் ஸ்மார்ட்போனாக எட்ஜ் 30 அல்ட்ராவும், உலகின் மிகவும் நேர்த்தியான பவர்ஹவுஸ் ஸ்மார்ட்போனாக எட்ஜ் 30 ஃப்யூஷனும் - பலரின் ஆர்வத்தை தூண்டும் சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்க உள்ளது.

அதாவது முறையே ரூ.51,999 மற்றும் ரூ.36,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது!

Best Mobiles in India

English summary
7 Motorola Smartphones Get Unbelievable Discounts on Flipkart Big Billion Days Sale 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X