1 இல்ல 2 இல்ல.. 7 ஆப்ஷன் இருக்கு.. OnePlus 13-க்கு பதிலாக வேறு எந்த போனை வாங்கலாம்?
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13 5ஜி மாடல் ஆனது நாளை (ஜனவரி 10 ஆம் தேதி) முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஒருவேளை உங்களுக்குள் "ஒன்பிளஸ் 13-ஐ நம்பி வாங்கலாமா? அல்லது வேறு நல்ல ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாமா?" என்கிற சந்தேகம் இருந்தால்..கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஏனென்றால் ஒன்பிளஸ் 13-க்கு ஸ்மார்ட்போனிற்கு பதிலாக அதற்கு ஈடாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்கிற பட்டியலை இங்கே பகிர்ந்துள்ளோம். இந்த பட்டியலில் ஏற்கனவே அறிமுகமாகி விட்ட 5 ஸ்மார்ட்போன்களும், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 ஸ்மார்ட்போன்களும் என மொத்தம் 7 போன்கள் உள்ளன:

01. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்: ஆப்பிளின் ஏ18 ப்ரோ சிப் உடன் வரும் இந்த மாடல் எந்தவொரு ஸ்மார்ட்போனுடனும் ஒப்பிடமுடியாத செயல்திறனை உறுதி செய்கிறது. ஒன்பிளஸ் 13-ஐ விட இது மிகவும் விலை உயர்ந்தது என்றாலும் கூட பெஸ்ட் ஆல்ட்ர்நேட்டிவ் என்று வந்துவிட்டால்.. இதுதான் டாப்பர்!
02. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனும் கூட ஒன்பிளஸ் 13-க்கான ஒரு நல்ல ஆல்ட்ர்நேட்டிவ் மாடலாகும். இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கூடவே மைக்ரோ-குவாட்-கர்வ்டு AMOLED 1.5K 120Hz டிஸ்பிளே, தரமான கேமரா செட்டப், 100W சார்ஜிங் ஆதரவுடன் 5,800mAh பேட்டரி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
03. ஐக்யூ 13 (iQOO 13): ஸ்னாப்டிராகன் 8 எலைட் மூலம் இயக்கப்படும்இந்த ஸ்மார்ட்போனும் கூட ஒன்பிளஸ் 13-க்கான மற்றொரு சிறந்த ஆல்ட்ர்நேட்டிவ் ஆகும். 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே, 50எம்பி + 50எம்பி + 5எம்பி கேமரா, மிகப்பெரிய 6,000mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ (Oppo Find X8 Pro): டைமன்சிட்டி 9400 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் சிறந்த சமநிலையை வழங்கி, ஒன்பிளஸ் 13-க்கான நல்ல போட்டியாளர் ஆக உள்ளது. டூயல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்களை உள்ளடக்கிய கேமரா செட்டப்புடன் வரும் இது ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro): ரூ.94,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 9400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இதுவும் ஒன்பிளஸ் 13-க்கான ஒரு தகுதியான போட்டியாளராக உள்ளது. குறிப்பாக கேமரா செட்டப்பில், எல்லா போன்களையும் தூக்கி சாப்பிடுகிறது. இது 50எம்பி ப்ரைமரி + 50எம்பி அல்ட்ரா-வைட் + 3.7x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது.
6. சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus): இது வருகிற ஜனவரி 22, 2025 அன்று நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போது அறிமுகமாகும். இது நிச்சயமாக ஒன்பிளஸ் 13-க்கான மற்றொரு வல்லமைமிக்க போட்டியாளராக இருக்கும். இது ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் - சிறந்த மொபைல் அனுபவங்களை வழங்கும் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
7. ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro): இது இன்னும் உலகளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, நிச்சயமாக இதுவும் ஒன்பிளஸ் 13-க்கான மிகவும் நெருக்கமான போட்டியாளராக இருக்கும். ஏனென்றால் இதுவும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் என்றும், இந்த போன் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை விவரம்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.69,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.76,999 க்கும் மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று வேரியண்ட்களுமே ஜனவரி 10 ஆம் தேதியன்று திறந்த விற்பனைக்கு வரும்
ஒன்பிளஸ் 13 மேக்னெட்டிக் கேஸ்களின் விலை விவரம்: ஒன்பிளஸ் 13 சாண்ட்ஸ்டோன் மேக்னடிக் கேஸ் ரூ.1,299 க்கும், வூட் பிளாக் ஃபினிஷில் உள்ள ஒன்பிளஸ் 13 வுட் க்ரெயின் ஹாஃப்-பேக் கேஸ் ரூ.2,299 க்கும் மற்றும் ஒன்பிளஸ் 13 அரமிட் ஃபைபர் மேக்னடிக் கேஸ் ரூ.2,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துமே ஜனவரி 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








