போடு.. ஆரம்பமே ரூ.2000 ஆபர்.. 6550mAh பேட்டரி, 12GB ரேம், 50MP Sony கேமரா.. பரபர விற்பனையில் புது POCO போன்!
6550mAh பேட்டரி, 12ஜிபி வரையிலான ரேம், 50எம்பி சோனி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய கேமரா செட்டப் மற்றும் பல முக்கிய அம்சங்களுடன், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமான போக்கோவின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (ஜனவரி 14) முதல் விற்பனைக்கு வந்தது.
அது போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (Poco X7 Pro 5G) ஸ்மார்ட்போனாகும். இந்தியாவில் இது போக்கோ எக்ஸ்7 5ஜி (Poco X7 5G) உடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது. ப்ரோ மாடல் ஆன போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி இந்திய விற்பனை இன்று தொடங்கியது. இந்த மாடலின் விலை நிர்ணயம் என்ன? இதன்மீது கிடைக்கும் விற்பனை சலுகைகள் என்னென்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

இந்தியாவில் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் நெபுலா கிரீன் (Nebula Green), அப்சிடியன் பிளாக் ( Obsidian Black) மற்றும் போக்கோ யெல்லோ (Poco Yellow) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 பேங்க் ஆஃபர் (Bank Offer) கிடைக்கும். இதன் மூலம் மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகளையும் முறையே ரூ.25,999 மற்றும் ரூ.27,999 க்கு வாங்க முடியும்.
போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உடனான 6.73-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜிற்கான ஆதரவை கொண்டுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் அனுப்பப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டரை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக இது 20-மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது இதில் ஏஐ-பேக்டு இமேஜிங், போட்டோ எடிட்டிங் மற்றும் போக்கோ ஏஐ நோட்ஸ் போன்ற பிற ஏஐ டூல்களுக்கான ஆதரவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90W ஹைப்பர்சார்ஜ் ஆதரவுடன் 6,550mAh பேட்டரியைக கொண்டுள்ளது. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி இது 47 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து ஸ்மார்ட்போனின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.
போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இந்தியாவில் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.23,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் காஸ்மிக் சில்வர், கிளேசியர் கிரீன் மற்றும் போக்கோ யெல்லோ ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இது ஜனவரி 17 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








