Home
Mobile

என்ன ஆர்டர் போட்ருலாமா.. 6500mAh பேட்டரி போன் மீது ரூ.6250 விலை குறைப்பு.. எந்த மாடல்?

8000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் ஆனது ஒட்டுமொத்த இந்தியர்களையும் 'டெம்ப்ட்' ஆக்கியுள்ளது என்றே கூறலாம். அது ஐக்யூ இஸட்10 டர்போ பிளஸ் (iQOO Z10 Turbo Plus) மாடல் ஆகும். டெம்ட் ஆக காரணம் - இப்போதைக்கு இது சீனாவில் அறிமுகமாகி மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய இஸட்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், இதுவும் விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உலா நிலையில், முன்னதாக 6500mAh பேட்டரி உடன் இந்தியாவில் அறிமுகமான ஒரு இஸட்10 சீரீஸ் மாடல் இப்போது ரூ.6250 டிஸ்கவுண்ட்டை / விலை குறைப்பை பெற்றுள்ளது.

6500mAh பேட்டரி போன் மீது ரூ.6250 விலை குறைப்பு.. எந்த மாடல்?

அது ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.18,999 க்கு பதிலாக ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது. இது வங்கி சலுகையை உள்ளடக்கிய ஆபர் விலை ஆகும்.

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.72-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளே
- பஞ்ச் ஹோல் டிசைனில் 8எம்பி செல்பீ கேமரா
- 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான பெரிய 6500mAh பேட்டரி

ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 2408 × 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு உடனான 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம், 128ஜிபி / 256ஜிபிசி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷ், 4கே வீடியோ பதிவிற்கான ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8எம்பி செல்பீ கேமரா உள்ளது

பேட்டரியை பொருத்தவரை இது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ், ஐபி64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன் ஆகியவைகளை கொண்டுள்ளது

மேலும் 5ஜி (NSA) மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு, யூஎஸ்பி டைப்-சி 2.0, யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 165.7×76.3×8.09மிமீ மற்றும் எடையில் 204 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
6500mAh Battery iQOO Z10x 5G Price Drops in Amazon India Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X