வெளுக்குது விற்பனை.. வெறும் ரூ.24,999-க்கு வந்த சாம்சங்.. OIS கேமரா.. 30X ஸ்பேஸ் ஜூம்.. அமேசான் விலை குறைப்பு!
அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Freedom Festival Sale) இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நேரத்தில் ரூ.49,999 பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) போன் இப்போது, வெறும் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது அமேசான் நிறுவனம். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ போனின் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், அமேசானில் அதிகப்படியான டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வரும் மாடல்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதில் கிட்டத்தட்ட பாதி விலைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி ஆர்டரில் பின்னிப்பெடல் எடுக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S21 FE 5G Specifications): இந்த சாம்சங்கில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் (Octa Core Qualcomm Snapdragon 888 5nm) சிப்செட் மற்றும் ஒன் யுஐ 4 (One UI 5) வருகிறது. வழக்கமான அட்ரினோ 660 ஜிபியு (Adreno 660 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வருகிறது.
12 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (Dual Pixel Autofocus) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி வருகிறது. பிடிஏஎப் (PDAF) ஆட்டோபோகஸ் சப்போர்ட் உள்ளது. டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) வருகிறது.

அதேபோல 30X ஸ்பேஸ் ஜூம் (Space Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மேலும், 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது.
மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த பேட்டரி உடன் வெறும் 177 கிராம் எடை கொண்டுள்ளது. 7.9 மிமீ தடிமன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
மேலும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. இந்த போனின் விலை ரூ.49,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ரூ.24,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி போனை வெறும் ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பிரீமியம் கேமரா பீச்சர்களை கொண்ட போன்களில் இதுவும் டாப் மாடலாகும்.


Click it and Unblock the Notifications








