Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. ரூ.27,000 விலை குறைப்பு.. மட்ட ரேட்டில் சாம்சங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் (Flipkart Big Billion Days Sale) டாப் டிஸ்கவுண்ட் லிஸ்ட்டில் சாம்சங் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) போன் இருக்கிறது. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் போனுக்கு கிடைத்துள்ள விலை குறைப்பு, பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்கள் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. சாம்சங் போன்களுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விலையில் சாம்சங் பிரியர்கள் கனவிலும் எதிர்பார்க்காத விலையில் பிரீமியம் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போன் கிடைக்கிறது. ரூ.59,999 பட்ஜெட்டில் வெளியாகி இப்போது பாதிக்கு பாதி விலைக்கு வந்துள்ளது.

பொளக்குது ஆர்டர்.. ரூ.27,000 விலை குறைப்பு.. மட்ட ரேட்டில் சாம்சங்!

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S23 FE Specifications): இந்த போனின் டிசைனே அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஃபிரேம் மற்றும் பேக் பேனலில் டூயல் கலர் டோன் கொண்டிருக்கிறது. அலுமினியம் ஃபிரேம் (Aluminium Frame) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடக்சன் வருகிறது. ஆகவே, குவாலிட்டி பிரீமியமாக கிடைக்கிறது.

பேக் பேனலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி பிரைமரி சென்சாருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilizyion) டெக்னாலஜி வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்டெடி அவுட்புட் கிடைக்கும். 123 டிகிரி பீல்டு வியூ கொண்ட 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இதுபோக 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளது.

இந்த டெலிபோட்டோவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது. மேலும், 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) சப்போர்ட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனில் 10 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதில் ஆட்டோபோகஸ் உள்ளது. ஆகவே, கேமரா பிரியர்கள் எதிர்பார்க்கும் அவுட்புட் இந்த போனில் தாராளமாக கிடைக்கும். IP68 ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சனுடன் 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட இன்பினிட்டி-ஓ டைனாமிக் (Infinity-O Dynamic) பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2200 4என்எம் (Octa Core Samsung Exynos 2200 4nm) சிப்செட் கிடைக்கிறது. கிராபிக்ஸ் கார்டும் சாம்சங் நிறுவனத்தின் எக்ஸ்கிளிப்ஸ் 920 ஜிபியு (Xclipse 920 GPU) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனில் 2 மாடல்கள் கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

அதோடு 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் வருகின்றன. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.மேலும், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வருகிறது. 4500mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்திய மார்கெட்டில் அறிமுகமானபோது, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,999 ஆக இருந்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ பிளிப்கார்ட் விற்பனை (Samsung Galaxy S23 FE Flipkart Sale): இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் வெறும் ரூ.29,999 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே ரூ.27,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
62 Percent Discount on Samsung Galaxy S23 FE in Flipkart Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X