Home
Mobile

6100mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்.. என்ன மாடல்? என்ன விலை? எப்போது அறிமுகம்?

சாம்சங் (Samsung) உட்பட சில மொபைல் நிறுவனங்கள் மட்டுமே 6000எம்ஏஎச் பேட்டரியை (6000mAH Battery) கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன; அதுவும் வேண்டுமென்றே.. அதை ஒரு முக்கிய அம்சமாக காட்டி, வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே "பிக் பேட்டரி" போன்களை அறிமுகம் செய்கிறது. இதே சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24) மாடலில் 4000எம்ஏஎச் பேட்டரியை தான் பேக் செய்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படியிருக்க, ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமும் இந்த பட்டியலில் இணையும் என்பது போல் தெரிகிறது.

நம்பகமான சைனீஸ் டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digitial Chat Station) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி ஒன்பிளஸ் நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனில் 6100எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும். அதென்ன மாடல்? அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

6100mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்.. என்ன மாடல்?

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை பற்றித்தான். வழக்கமாக ஏஸ் ப்ரோ சீரிஸ் போன்கள் சீனாவில் மட்டுமே அறிமுகமாகும். ஆனால் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விஷயத்தில் அப்படி எதையும் உறுதியாக கூற முடியாது. இது வேறு பெயரின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

இப்படிதான் ஷாவ்மீ சிவி சீரிஸ் போன்கள் சீனா-ஒன்லி போன்களாக இருந்தன. ஆனால் ஷாவ்மீ 14 சிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த சைனீஸ் கம்பெனிகளை நம்பி எதையும் உறுதியாக கூற முடியாது. வியாபாரம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்.. போட்டி என்று வந்துவிட்டால்.. எந்த வழக்கங்களும் கடைபிடிக்கப்படாது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை விட மிகப்பெரிய அப்கிரேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை ஒன்பிளஸ் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இது பெரும்பாலும் 2024 ஜூலை மாதத்தில் அறிமுகமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவல்களின்படி ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6100எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும். இது உண்மையாக இருந்தால் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள 5000mAh பேட்டரி யூனிட்டிலிருந்து புதிய மாடலானது 1,100mAh அதிகமாக கொண்டிருக்கும். உண்மையிலேயே இது மிகப்பெரிய "பம்ப்" ஆகும்.

முன்னதாக, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-செல் பேட்டரி அமைப்பை கொண்டிருக்கும் என்கிற தகவல் வெளியானது. அதையும் இதையும் ஒன்றாக வைத்து பார்க்கும் போது, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு செல்லின் பேட்டரி திறனும் 2,970எம்ஏஎச் இருக்கலாம், இப்படியாக ஸ்மார்ட்போனின் ஒருங்கிணைந்த வேல்யூ 5,940எம்ஏஎச் ஆக இருக்கலாம் மொத்த வேல்யூ 6,100mAh ஆக இருக்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை , இது செல்பீ ஷூட்டருக்கான ஹோல் பஞ்ச் கட்அவுட்டுடன் கர்வ்டு டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.78-இன்ச் 1.5கே ரெசல்யூஷன் 8டி LTPO டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் இது 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ என்ன விலைக்கு வரும்? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.34,600 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே விலைக்குறியுடன், இதே மாடல் (வேறு பெயரின் கீழ்) இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
6100mAh battery 100W Fast Charging in OnePlus Ace 3 Pro Launch Timeline Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X