முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.44,000 விலை குறைப்பில் Motorola ரேசர் 40 அல்ட்ரா.. OIS கேமரா.. 3800mAh பேட்டரி!
பிரீமியம் ஃபிளிப் போனை கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் வாங்க வேண்டுமானால், அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையில் (Amazon Great Freedom Sale) கிடைக்கும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) பக்காவான ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், ரூ.89,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது வெறும் ரூ.45,999 விலைக்கு கிடைக்கிறது. மெயின் மற்றும் அவுட்டர் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா கொண்ட இந்த போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 40 Ultra Specifications): இந்த அல்ட்ரா மாடலில் மெயின் மற்றும் அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. ஆகவே, 6.9 இன்ச் (2640 × 1080 பிக்சல்கள்) பிஓஎஸ்இடி (pOLED) மெயின் டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதேபோல 3.6 இன்ச் (1056 × 1066 பிக்சல்கள்) பிஓஎஸ்இடி அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் குயிக்வியூ சப்போர்ட் உள்ளது. ஆகவே, மெயின் டிஸ்பிளேவை போல பல்வேறு ஆப்களை இதிலும் பயன்படுத்தலாம். மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது.
சொல்லப்போனால், ஃபிளிப் போன்களில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களை கம்மியான விலைக்கு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடல் மட்டுமே கொடுக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலாஜி கொண்ட 12 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த ஆட்டோபோகஸ் மற்றும் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது.
இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm) சிப்செட் உள்ளது. பிரீமியம் மாடல்களில் வரும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ டெக்னாலஜி வருகிறது. ஃபிளிப் டிசைன் கொண்டிருப்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.
IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5W வயர்லெஸ் சார்ஜிங், 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 3800mAh பேட்டரி வருகிறது. இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ர போனில் விவா மெஜந்தா (Viva Magenta), இன்பினிட் பிளாக் (Infinite Black), கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் பீச் ஃபஸ் (Peach Fuzz) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
இந்த போனின் விலை ரூ.89,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையில் வெறும் ரூ.46,749 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.43,400 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.45,999 பட்ஜெட் வாங்கி கொள்ளலாம்.
கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில், இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வருவதால், ஃபிளிப் போன் பிரியர்கள் அறக்க பறக்க ஆர்டர் செய்து வருகின்றனர். பிரீமியம் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பக்கா பர்ஃபாமென்ஸ் மற்றும் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கும் ஃபிளிப் போன் தேடிக்கொண்டிருப்பவர்கள் இந்த மாடலை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








