Samsung-க்கு செக்.. 6000mAh பேட்டரி உடன் இந்தியாவிற்கு வரும் இன்னொரு Realme GT சீரிஸ் போன்.. என்ன விலை?
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது. அது ரியல்மி ஜிடி 6டி மாடலாகும். கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (மே 29) முதல் தொடங்குகிறது. இதற்கிடையில் ரியல்மியின் துணைத்தலைவரான சேஸ் சூ, இந்திய சந்தையில் இன்னொரு ரியல்மி ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதென்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்? என்ன விலை? எப்போது அறிமுகம்? ரியல்மி ஜிடி 6டி-யின் விலை என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) மாடலை தொடர்ந்து இந்தியாவிற்கு வரும் அடுத்த ஜிடி சீரீஸ் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) இருக்கும். இது கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட (இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாத) ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ரியல்மி ஜிடி 5 ப்ரோ மாடலானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகமானது. இதன் அடிப்படையில், ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலானது அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் இது ஜிடி 5 ப்ரோ இருக்கும் 5400எம்ஏஎச் பேட்டரிக்கு பதிலாக 6000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இந்திய மொபைல் சந்தையில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் அதிக ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள சாம்சங் (Samsung) நிறுவனத்திற்கு ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒரு போட்டியாக இருக்கும்!
என்ன விலைக்கு வரும்? சீனாவில் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.40,000க்கு அறிமுகமானது. இதே போன்ற அல்லது இதைவிட சற்றே அதிகமான (ரூ.50,000 க்குள்) விலைக்கு ஜிடி 7 ப்ரோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
எப்போது அறிமுகமாகும்? "இந்தியாவில் ஏன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ மாடலை வெளியிடவில்லை?" என்கிற பயனரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, ரியல்மியின் துணை தலைவர், "இந்தியாவில் இந்த ஆண்டு ஜிடி 7 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும்" என்பதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் சரியான வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை.
கடந்த வாரம் தான் ஜிடி 6டி மாடல் அறிமுகமானது; இன்றுதான் இந்திய விற்பனையே தொடங்குகிறது என்பதால் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உடனடியாக நடக்காது என்பதை மட்டும் எங்களால் உறுதியாக கூற முடியும். பெரும்பாலும் இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த பிராண்ட் 2024 ஜூன் மாதத்தில் மற்றொரு ஜிடி-சீரிஸ் ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி 6-ஐ வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் விற்பனைக்கு வரும் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் உடன் இதை ரூ.24,999 க்கு வாங்கலாம்.
இதேபோல 8ஜிபி +256ஜிபி ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.32,999, ஆனால் தள்ளுபடிகளுக்கு பிறகு இதை ரூ.26,999-க்கு வாங்கலாம்; 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.35,999, ஆனால் தள்ளுபடியுடன் ரூ.29,999-க்கு வாங்கலாம். கடைசியாக 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.39,999, ஆனால் தள்ளுபடியின்கீழ் ரூ.33,999-க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








