ஆத்தாடி யோய்.. வெறும் ரூ.6,999-க்கு.. 6000mAh பேட்டரி, 8GB ரேம், 50MP கேமரா, மேஜிக் ரிங் டிஸ்பிளே! என்ன மாடல்?
ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. அதற்கு பல ஸ்மார்ட்போன்களை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் அதற்கெல்லாம் சிம்ம சொப்பனமாக அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போன் என்றால், அது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் தான்!
இது ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 6000எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா, மேஜிக் ரிங் டிஸ்பிளே உட்பட பல அம்சங்களை பேக் செய்கிறது. சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (மார்ச் 9) முதல் தொடங்கியுள்ளது.

அசல் விலை VS ஆபர் விலை: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.7,799 ஆகும். இருப்பினும் இதை ரூ.6999 க்கு வாங்க முடியும். இதற்காக நீங்கள் எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் வழியாக கிடைக்கும் ரூ.800 தள்ளுபடியை பெற வேண்டும்.
பேங்க் ஆபர் மட்டுமின்றி இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது இன்று (மார்ச் 9 ஆம் தேதி) முதல் பிளிப்கார்ட் வழியாக, கேலக்ஸி ஒயிட் (Galaxy White),டிம்பர் பிளாக் (Timber Black) மற்றும் ஷைனி கோல்ட் (Shiny Gold) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் விரிவான அம்சங்கள்: இது 1,612 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate),180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (80Hz touch sampling rate) மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (500 nits peak brightness) உடனான 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் இது 4ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் (4GB LPDDR4x RAM) மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் (12nm MediaTek Helio G36 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 4 ஜிபி வரை கூடுதலாக விரிவாக்கக்க முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 8ஜிபி ஆக அதிகரிக்க முடியும். மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்டுக்கான (MicroSD Card) ஸ்லாட்டும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) உடன் அனுப்பப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் குவாட்-எல்இடி ரிங் ஃப்ளாஷ் (Quad-LED Ring Flash) உடனான "குறிப்பிடப்படாத" ஏஐ சென்சார் உள்ளது.
முன்பக்க கேமராவை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் மையப்படுத்தப்பட்ட ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட்-ஐ (Apple Dynamic Island) போன்ற மேஜிக் ரிங் (Magic Ring) அம்சமும் உள்ளது. இது பல்வேறு நோட்டிஃபிகேஷன்களை காட்சிப்படுத்தும்.
பேட்டரியை பொறுத்தவரை, இது 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உள்ளது. இது 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் யூஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








