Home
Mobile

மிரட்டுதே.. வெறும் ரூ.7500 க்கு இப்படி ஒரு Phone ஆ.. 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி வேற!

இந்தியாவில் ஒரு சில பட்ஜெட் போன்கள் மட்டுமே விலையை கணிக்க முடியாதபடி, பிரீமியம் லுக்கை வழங்குகின்றன. அந்த பட்டியலில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சேர்ந்துள்ளது. இன்னும் சுவாரசியமாக இது விலையை மீறிய டிசைனை மட்டுமல்ல, விலையை மீறிய அம்சங்களையும் வழங்குகிறது.

நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது!

வெறும் ரூ.7500 க்கு இப்படி ஒரு Phone ஆ.. 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 6000mAh ப

Infinix Smart 7 விலை, அம்சங்கள் பற்றி எந்த குழப்பமும் இல்லை!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்பதால் இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. இது என்ன விலைக்கு வெளியாகும், என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்!

Infinix Smart 7 என்ன விலைக்கு வரும்?

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் மெமரி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் வாங்க கிடைக்கும். இது கண்டிப்பாக ரூ.7,500 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் தான் அறிமுகம் செய்யப்படும்!

ஏனென்றால், இது மற்ற நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட வேண்டும் என்கிற முனைப்புடன் இந்தியாவில் களமிறங்குகிறது. குறிப்பாக மோட்டோ இ13, போக்கோ சி50, ரெட்மி ஏ1 போன்ற மாடல்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும்!

Infinix Smart 7 டிஸ்பிளே:

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 12 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் வரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

எச்டி+ ரெசல்யூஷன், 1612 x 720 பிக்சல்கள் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வரும் இதன் டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில், செல்பீ கேமராவிற்கான ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது.

Infinix Smart 7 கேமரா:

கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்பக்கத்தில், சதுர வடிவிலான கேமரா மாட்யூலில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது

அதனுள் 13-மெகாபிக்சல் மெயின் கேமரா சென்சார் மற்றும் ஒரு ஏஐ லென்ஸ் (AI Lens) இருக்கும். கேமரா சென்சார்களுக்கு அருகில் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் 30fps என்கிற வேகத்தில் 1080p வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

Infinix Smart 7 பேட்டரி:

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை ஸ்டோரேஜை நீட்டிக்கும் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். அதாவது மற்ற நாடுகளில் வெளியாகவும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போனில் வெறும் 5,000mAh பேட்டரியே இடம்பெறும்!

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்:

- 99% ஆன்டி-பாக்டீரியல் ரேட்டிங்கை கொண்ட சில்வர்-அயன் ஸ்ப்ரே பூச்சு
- பிரீமியம்லுக்கை வழங்கும் வேவ் பேட்டர்ன் டிசைன்
- பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- AI ஃபேஸ் அன்லாக்.
- சிப்செட் / ப்ராசஸர் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
6000mAh Battery and 6.6 inch Display For Just Rs.7500, Check New Infinix Smart 7 Budget Phone India Launch Date and It's Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X