ரூ.12,000 பட்ஜெட்ல.. இதை விட ஒரு நல்ல 5G போன் இருந்தா.. தாராளமா வாங்கிக்கோங்க.. Samsung-னா சும்மாவா!
ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 5ஜி சேவைகள் நாடு முழுவதும் காட்டுத்தீ போல "பரவுகிறது". இனிமேல் நீங்கள் வாங்குமொரு புதிய ஸ்மார்ட்போனிற்கான முக்கிய தகுதிகளில் 5ஜி கனெக்டிவிட்டியும் ஒன்றாக மாறும். அதற்காக ஒரு ஸ்மார்ட்போனில் 5ஜி சப்போர்ட் இருந்தால் மட்டுமே போதுமா? கண்டிப்பாக போதாது!
அது 5ஜி ஆதரவுடன் சேர்த்து.. டிஸ்பிளே, கேமரா, ப்ராசஸர், பேட்டரி, ஸ்டோரேஜ் என கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் 'டீசன்ட்' ஆன அம்சங்களை பேக் செய்ய வேண்டும். எல்லாவற்றை விட முக்கியமாக அது பட்ஜெட் விலை நிர்ணயத்தை கொண்டிருக்க வேண்டும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.15,000 க்குள் இருக்க வேண்டும்!

அப்படியான ஒரு ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்சி எஃப்14 5ஜி (Samsung Galaxy F14 5G), சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், நேற்று (மார்ச் 30) முதல் முதல் விற்பனையை தொடங்கி உள்ளது. இந்த போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதை ஏன் நம்பி வாங்கலாம்? இதோ விவரங்கள்:
விலை மற்றும் விற்பனை: சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி ஸ்மார்ட்போனானது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ12,990, மறுகையில் உள்ள ஹை-எண்ட் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.14,490.
இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஓஎம்ஜி பிளாக், கோட் க்ரீன் மற்றும் பே பர்பிள் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாகவும், சாம்சங் நிறுவனத்தின் சொந்த சாம்சங் இ-ஸ்டோர் (Samsung E-store) வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
விரிவான அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இன்ஃபினிட்டி வி நாட்ச் டிசைன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் உடனான 6.6-இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளவை கொண்டுள்ளது. மேலும் இது சாம்சங்கின் எக்ஸிநோஸ் 1330 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ கோர் 5.1-இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு மேஜர் அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்குமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச்சில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உட்பொதிக்கப்பட்டுள்ளது. =
கேலக்ஸி எஃப்14 5ஜி ஸ்மார்ட்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய 6000mAh பேட்டரியாகும். இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜிங் அடாப்டர் அனுப்பிடப்படாது. கடைசியாக இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது; கூடவே ஏஐ ஃபேஸ் அன்லாக்கிற்கான ஆதரவும் உள்ளது.
நம்பி வாங்க 6 காரணங்கள்: (1) இது ஐபி67 ரேட்டிங், கொரில்லா கிளாஸ் 5 என மிகவும் பலமான வடிவமைப்பை பெற்றுள்ளது. (2) கூடவே இது விலையை மீறிய நேர்த்தியான வடிவமைப்பையும் பெற்றுள்ளது - இதை ரூ.13,000 பட்ஜெட் போன் என்று கூறினால் பலரும் நம்ப மாட்டார்கள் (3) இதன் கேமரா செட்டப் இரவு நேரங்களில் கூட நல்ல அவுட்புட்டை வழங்குகின்றன.
(4) இது நல்ல வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் பெரிய சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. (5) இதன் பெரிய பேட்டரி 2 நாட்களுக்கு மேலான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. (6) கடைசியாக இதன் செயல்திறன், ஒவ்வொரு நாளுக்குமான அத்தியாவசியங்களை செய்ய போதுமானதாக இருக்கிறது!


Click it and Unblock the Notifications








