வரக்கூடிய வருடங்களில் ஸ்மார்ட்போன்களில் இடம்பிடிக்கக் கூடிய 6 அம்சங்கள்.!

By Ilamparidi
|

தகவல் தொழிநுட்பத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நமது கைகளுக்குக்குள்ளாகவே உலகம் அடங்கிப்போகிற வகையில்அத்தனை வசதிகளும் நமது ஸ்மார்ட்போன்களிலேயே அடங்கியுள்ளவாறு புதிய அம்சங்கள் அடங்கிய ஸ்மார்ட்போன்களை தயாரித்துத் தருகின்றன

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள்.

அந்தவகையில் இந்தவருடம் வரக்கூடிய ஸ்மார்ட்போன்களில் எந்த மாதிரியான அம்சங்கள் நிரம்பியிருக்கக்கூடும்

என்பதனைப் பார்ப்போம்.

வளையக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய டிஸ்பிளே:

வளையக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய டிஸ்பிளே:

இப்போது நாம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் நேரான மற்றும் வளையாத டிஸ்பிளேக்களைக்கொண்டே உள்ளன ஆனால் இனி வரக்கூடிய காலங்களில் வளையக்கூடிய மற்றும் மடியக்கூடிய அளவிலான ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சாம்சங் சியோமி போன்றவை செய்யக்கூடும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது, மேலும் அவ்வாறு வளையக்கூடிய டிஸ்பிலே கொண்ட போன்கள் தயாரிக்கப்பட்டால் அதற்கேற்ற பேட்டரிகளை உருவாக்கப்படும் மேலும் இந்தவகைபோன்களில் ஓஎல்டி ஸ்க்ரீன் வகை பயன்படுத்தப்படக்கூடும்.

காட்சிகளை தெளிவாகக்காணல்:

காட்சிகளை தெளிவாகக்காணல்:

இப்போது வரக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்களில் கேமரா வழியே காணக்கூடிய காட்சிகள் அனைத்தையும் தெளிவாகவும் துல்லியமாகவும் கேமரா வழியே காண்பது போன்ற உணர்வுகள் ஏதும் ஏற்படாத வகையில் 3டி தொழில்நுட்பத்தோடு வெளிவரும் என கூறப்படுகிறது.

3டி தெழில்நுட்பத்தோடு வேற லெவலில்:

3டி தெழில்நுட்பத்தோடு வேற லெவலில்:

ஆப்பிள் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பில் 3டி டிஸ்பிளேக்களை உடைய ஐபோனை தயாரிக்க உள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது இதே தொழில்நுட்பத்தினை அமேசான் நிறுவனம் தனது பையர் போன் மாடலை தயாரித்தது ஆனால் அது பிரபலமடையவில்லை நின்டென்டோ நிறுவனம்

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டது.இனிவரக்கூடிய காலங்களில் புதிய 3டி ஸ்மார்ட்போன்களும் அதற்கான ஆஃப்களும் சந்தையில் கிடைக்கும் என நம்பலாம்.

என்எப்சி உபயோகம்:

என்எப்சி உபயோகம்:

இப்போதைய காலகட்டத்தில் நாம் அதிகமாக எந்தப்பொருட்கள் வாங்குவதற்கும் மொபைல் பாங்கிங் சேவையையே பயன்படுத்துகிறோம் சாம்சங் பே(pay), ஆப்பிள் பே(pay) போன்றவை என்எப்சியோடு ஒருங்கிணைக்கப்படுகிறது வருங்காலத்தில் ஷாப்பிங்கின் போது பணம் செலுத்துவதற்கும் உங்கள் வீட்டுக்கதவு ஹோட்டல் ரூம் கதவு போன்றவற்றை தொலைவிலிருந்து லாக் செய்வது போன்றவற்றிற்கும் இது உதவும்.

ப்ரொஜக்டர்களோடு கூடிய ஸ்மார்ட்போன்கள்:

ப்ரொஜக்டர்களோடு கூடிய ஸ்மார்ட்போன்கள்:

ப்ரொஜெக்ட்டார்களோடு கூடிய ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சந்தையில் சாம்சங் கேலக்சி பீம் பீம்2 போன்றவை உள்ளன இத்தகைய தொழில்நுட்பத்தோடு வெளிவரக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வழியே இமேஜ் வீடியோ போன்றவற்றை தெளிவாகவும் துல்லியமாகவும் காணலாம் சென்சார் உடைய கேமராக்கள் போன்றவை இதனூடே இருக்கும் என்பது இன்னும் ஓர் சிறப்பம்சம் ஆகும்.இதற்கேற்ற ஆஃப்களும் வெளிவரக்கூடும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அதிநவீன டெக்னாலஜி வசதிகள் கொண்ட 10 ஸ்மார்ட்போன்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
6 things smartphones can do in the years to come.Read more about this in Tamil Gizbot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X