ஹூவேய் நிறுவனத்தின் புதிய மாடலின் எதிர்பார்ப்பும் சிறப்பு அம்சங்களும்
சீன நிறுவனத்தின் பல தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் ஆதரவு கொடுத்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் காலடி எடுத்துள்ள நிறுவனம் ஹூவேய் (Huawei) நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு மாடல்களான ஹூவேய் P9 மற்றும் ஹானர் 8 ஆகிய மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் இந்நிறுவனம் தனது புதிய மாடல் ஒன்றை விரைவில் வெளியிட திட்டமிட்டு உள்ளது.
100 சதவீதம் கேஷ்பேக், ரூ.11,000 மதிப்புள்ள இலவசங்கள், இது தீபாவளி சலுகை!!
ஹூவேய் P9 மாடல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக சீனாவின் முன்னணி இணையதளம் ஒன்று செய்தி வெளீயிட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாடலில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹூவேய் P9 மாடலின் டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?
Evan Blass என்பவர் தனது டுவிட்டரி. ஹூவேய் P9 மாடலின் டிஸ்ப்ளே வளைந்த டிஸ்ப்ளே என்றும் இந்த டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி S7 மாடலின் டிஸ்ப்ளேவுக்கு இணையானது என்றும் ஹெரிவித்துள்ளார். மேலும் புகைப்படங்களுடன் இவர் வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்து இரண்டு வித பாடி ஸ்டைலுடன் இந்த புதிய மாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவேய் P9 மாடலின் கேமிரா எப்படி இருக்கும் தெரியுமா?
தற்போதைய ஸ்மார்ட்போன் உலகின் டூயல் கேமிரா என்பது டிரண்ட் ஆகியுள்ளது. இந்த டிரண்டுக்கு ஹூவேய் P9 மாடல் மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த ஹூவேய் P9 மாடலிலும் டூயல் கேமிரா தான் உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் கூறுகின்றன. அனேகமாக இந்த ஹூவேய் P9 மாடலில் 20 எம்பி வகை கேமிரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கோட் நேம் என்ன என்று தெரியுமா?
ஹூவேய் P9 மாடலின் கோட் நேம் மான்ஹாட்டன் மற்றும் லாங் ஐஸ்லாண்ட் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவேய் P9 மாடலின் ரெசலூசன் டிஸ்ப்ளே எப்படி?
இந்த மாடலின் செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஹூவேய் P9 மாடலில் QHD ரெசலூசன் டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே பல புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் என்பதால் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பை வெளியீட்டுக்கு முன்பே ஏற்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராஸசர் எப்படி இருக்கும்?
ஒரு ஸ்மார்ட்போன் எந்த வடிவத்தில் இருந்தாலும், அழகழகான மாடல்களில் இருந்தாலும் பிராஸசர் ரொம்ப முக்கியம். இந்த ஹூவேய் P9 மாடலின் பிராஸசரில் 64 பிட், ஆக்டோகோர் ஹைசிலிக்கான் கிரின் 960 சிப்செட் பிராஸசர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெமரி தகவல்கள் என்னென்ன என்று பார்ப்போமா?
ஹூவேய் P9 மாடலில் மெமரியை பொருத்தவரை பல மாடல்களாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4GB ரேம் + 64GB இன்னர் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் 6GB ரேம் + 256GB of இன்னர் ஸ்டோரேஜ் ஆகிய மெமரி அம்சங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் வெளிவரவுள்ள இந்த மாடலின் புதிய தகவல்கள் அவ்வப்போது எங்களுக்கு கிடைக்கும்போது வெளியிட்டு கொண்டு இருக்கின்றோம்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications








