Home
Mobile

செம்ம டிமாண்ட்.. மார்ச் 27 முதல் மீண்டும் SALE.. ரூ.7499 க்கு 6000mAh பேட்டரி, 50MP கேமரா, IP64.. எந்த மாடல்?

ஏஐ பிளஸ் (Ai Plus) நிறுவனத்தின் லேட்டஸ்ட், சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக, கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஐ பிளஸ் பல்ஸ் 2 (Ai Plus Pulse 2) ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை மார்ச் 27 ஆம் தேதி நடக்கும் என்று பிளிப்கார்ட் வலைத்தளம் அறிவித்துள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? நம்பி வாங்கலாமா?

ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது முன்னதாக அறிமுகமான ஏஐ பிளஸ் பல்ஸ் 1 மாடலில் உள்ள 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டை விட ஒரு நல்ல அப்கிரேட் ஆகும்.

செம்ம டிமாண்ட்.. மார்ச் 27 முதல் மீண்டும் SALE.. ரூ.7499 க்கு 6000mAh!

மற்றொரு அப்கிரேட் செல்பீ கேமராவில் உள்ளது. ஏஐ பிளஸ் பல்ஸ் 1 மாடலில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஆனால் பல்ஸ் 2 மாடலில் அது 8எம்பி செல்பீ கேமராவாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இது பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கூட, இன்னும் தெளிவான செல்பீகள் மற்றும் வீடியோ காலிங் தரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியர் கேமராக்களை பொறுத்தவரை, பல்ஸ் 2 ஸ்மார்ட்போனில் முன்னதாக வெளியான பல்ஸ் 1 மாடலில் உள்ளதை போலவே 50எம்பி டூயல் ஏஐ ரியர் கேமராக்கள் உள்ளன. சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் பிரபலமான பட்ஜெட் சிப்செட் உள்ளது அது 12என்எம் அடிப்படையிலான யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் ஆகும்.

ரூ.8000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் அதன் 6000எம்ஏஎச் பேட்டரி ஆகும். இந்த விலைக்கு வரும் பெரும்பாலான மாடல்களில் 5000எம்ஏஎச் பேட்டரி தான் உள்ளது. இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போன் எவ்வளவு வேகமாக சார்ஜ் ஆகும் என்பதை ஏஐ பிளஸ் பிராண்ட் விவரிக்கவில்லை. இது 18W சார்ஜருடன் வருவது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட பல ரூ.10,000 க்கும் குறைவான விலை நிர்ணயம் போன்கள் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டு தொடர்ந்து இயங்கினாலும், ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) உடன் வருகிறது. இதுவும் ஒரு நல்ல அப்கிரேட் ஆகும்.

என்ன விலை? அடுத்த விற்பனை எப்போது? பிளிப்கார்ட் வலைத்தளத்தில் உள்ள போஸ்டரின் படி இது மார்ச் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வரும். ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999 க்கும் வாங்க கிடைக்கும்.

நம்பி வாங்க நியாமான 6 காரணங்கள்:
1. நீண்ட பேட்டரி லைஃப் (6000mAh பேட்டரி)
2. அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்)
3. லேட்டஸ்ட்சாஃப்ட்வேர் (ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்)
4. விலைக்கேற்ற செயல்திறனை வழங்கும் சிப்செட் (யூனிசாக் டி7250 சிப்செட்)
5. விலைக்கு ஏற்ற கேமரா (50 மெகாபிக்சல்)
6. தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP64 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Reasons to Buy This 6000mAh Battery 4G Phone Ai Plus Pulse 2 Next Flipkart Sale On March 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X