ஆபர் விலையில் Samsung Galaxy S23.. கண்ணை மூடிக்கிட்டு வாங்க 6 காரணங்கள்.. வாங்காமல் இருக்க 3 காரணங்கள்!
எக்கச்சக்கமான ஆபர்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸின் கீழ் அறிமுகமான 3 ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை நேற்று (பிப்ரவரி 17) முதல் தொடங்கியது. இந்த 3 மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த கட்டுரை முழுக்க-முழுக்க உங்களுக்கானது தான்!
ஏனென்றால், கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 6 காரணங்களோடு சேர்த்து, ஏன் வாங்காமல் புறக்கணிக்கலாம் என்பதற்கான 3 காரணங்களையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுளோம்.
உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் மீது கிடைக்கும் அத்தனை வகையான அறிமுக சலுகைகளையும் பட்டியலிட்டுள்ளோம். இந்த தகவல்கள் எல்லாமே உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் விலை மற்றும் கலர் ஆப்ஷன்ஸ்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) சீரீஸின் கீழ் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வாங்க கிடைக்கிறது.
இந்த 3 மாடல்களுமே ஃபாண்டம் பிளாக், கிரீம், க்ரீன் மற்றும் லாவெண்டர் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன.
அதுமட்டுமின்றி சாம்சங் வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் சில ஸ்பெஷல் கலர் ஆப்ஷன்களையும் நீங்கள் வாங்கலாம். இந்த 3 மாடல்களின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை..
சாம்சங் கேலக்ஸி எஸ்23 (8ஜிபி + 128ஜிபி) - ரூ.74,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 (8ஜிபி + 256ஜிபி - ரூ.79,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (8ஜிபி + 256ஜிபி) - ரூ.94,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (8ஜிபி + 512ஜிபி) - ரூ.1,04,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (12ஜிபி + 256ஜிபி) - ரூ.1,24,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (12ஜிபி + 512ஜிபி) - ரூ.1,34,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (12ஜிபி + 1டிபி) - ரூ.1,54,999
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸை ஏன் வாங்கலாம் என்பதற்கான 6 காரணங்கள்
01. சக்திவாய்ந்த லேட்டஸ்ட் சிப்செட்
02. மிகவும் பிரகாசமான டிஸ்பிளே
03. கடினமான டிசைன்
04. அப்டேட் செய்யப்பட்ட செல்பீ கேமரா
05. ரியர் கேமராவின் லோ-லைட் புகைப்பட அம்சங்கள் அற்புதமாக உள்ளது
06. மிகவும் ஸ்டைலான மற்றும் புதிய ஓவர்-ஆல் டிசைன்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸை வாங்காமல் தவிர்ப்பதற்கான 3 காரணங்கள்
01. ரியர் கேமராவின் ஹார்ட்வேரில் எந்த மேம்பாடும் இல்லை
02. கேலக்ஸி எஸ்23 மாடலின் பேஸிக் வேரியண்ட்டில் வெறும் 128ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே உள்ளது
03. சார்ஜிங் ஸ்பீடில் எந்த மாற்றமும் இல்லை.
கேலக்ஸி எஸ்23 சீரீஸ் மீது கிடைக்கும் அறிமுக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
இஎம்ஐ (EMI) - ஸ்டாண்டர்ட் இஎம்ஐ விருப்பமானது மாதத்திற்கு ரூ.6750.98 முதல் தொடங்குகிறது. நீங்கள் டெபிட் கார்டு இஎம்ஐ விருப்பங்களையும் தேர்வு செய்யலாம்.
பண்டில் ஆபர் (Bundle Offer) - கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களால் வெறும் ரூ.4999 க்கு கேலக்ஸி வாட்ச்4 கிளாசிக் 4ஜி (Galaxy Watch4 Classic 4G) மற்றும் கேலக்ஸி பட்ஸ்2 (Galaxy Buds2) இயர்பட்ஸை சொந்தமாக்கி கொள்ள முடியும்.
இன்ஸ்டன்ட் பேங்க் ஆபர் (Instant Bank Offer) - எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ மற்றும் ஃபுல் ஸ்வைப், எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் / டெபிட் கார்டு இஎம்ஐ மற்றும் ஃபுல் ஸ்வைப் ஆகியவற்றில் ரூ.8000 உடனடி தள்ளுபடியை பெறலாம்.
எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus) - உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.8000 வரை தள்ளுபடியை பெறலாம்.
ஸ்மார்ட் கிளப் லாயல்டி புரோகிராம் (Smart Club Loyalty Program) - உங்களிடம் ஏற்கனவே உள்ள பாயிண்ட்களை ரீடிம் (Redeem) செய்யலாம் மற்றும் இந்த போன்களை வாங்குவதன் மூலம் 2% ஸ்மார்ட் கிளப் பாயிண்ட்களையும் பெறலாம்.
வெல்கம் பெனிஃபிட் (Welcome Benefit) - சாம்சங் ஷாப் ஆப் வழியாக வாங்கினால் ரூ.2000 வரையிலான தள்ளுபடி கூப்பனை பெறுவீர்கள்.
ரெஃப்ரெல் அட்வான்டேஜ் புரோகிராம் (Referral Advantage Program) - இதன் கீழ் உங்களுக்கு ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








