ஆஃபர் விலையில் Realme C55 விற்பனை.. நம்பி வாங்க 6 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 3 காரணங்கள்!
கடந்த வாரம் அறிமுகமான ரியல்மி சி55 (Realme C55) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று முதல் (மார்ச் 28) தொடங்கியது. ரியல்மி சி55 மாடலானது, லேட்டஸ்ட் ஐபோன்களின் உள்ள டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) போன்ற மினி கேப்சூல் (Mini Capsule) உடன் வரும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாகும்.
மினி கேப்சூலை தவிர்த்து இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88), 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 64எம்பி மெயின் கேமரா போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது.

இருப்பினும் இந்த ஸ்மாட்ர்ட்போனை வாங்கலாமா வேண்டாமா என்கிற தயக்கம் / குழப்பம் உங்களிடம் இருந்தால்.. ரியல்மி சி55-ஐ நம்பி வாங்குவதற்கான 6 காரணங்களும்,. இதை வாங்காமல் தவிர்ப்பதற்கான 3 நியாயமான காரணங்களும், இதற்கு பதிலாக வேறு எந்த போனை வாங்காமல் என்கிற பரிந்துரைகளும் இதோ:
ரியல்மி சி55-ஐ நம்பி வாங்க 6 காரணங்கள்: இதில் உள்ள 5000mAh யூனிட் ஆனது நல்ல பேட்டரி லைஃப்பை (Good Battery Life) வழங்குகிறது, கூடுதலாக இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (Good Fast Charging) வருகிறது, பட்ஜெட் போனாக இருந்தாலும் கூட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Finger Print Scanner) உடன் வருகிறது.
மேலும் ரியல்மி சி33 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 எஸ்-ஐ அடிப்படையாக கொண்ட லேட்டஸ்ட் ரியல்மி யுஐ 4.0-ஐ (Latest Realme UI 4.0) கொண்டுள்ளது. பிரத்யேக கார்டு ஸ்லாட்டுடன் (Micro SD Card Slot) வரும் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் டிஸ்ப்ளேவையும் (90Hz Refresh Rate Dispay) கொண்டுள்ளது.
ரியல்மி சி55-ஐ நம்பி வாங்காமல் தவிர்க்க 3 காரணங்கள்: இது ஹை-எண்ட் மொபைல் கேம்களுக்கான ஸ்மார்ட்போன் அல்ல. மேலும் இதன் கேமராக்கள் பகல் நேரத்தில் கூட சராசரியான அவுட்புட்டையே வழங்குகின்றன. கடைசியாக இதில் 5ஜி-க்கான ஆதரவு இல்லை; அதாவது இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போனாகும்!
ரியல்மி சி55-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம்? ரியல்மி சி55-க்கு பதிலாக நீங்கள் போக்கோ சி55 (POCO C55) மற்றும் ரெட்மி 11 ப்ரைம் (Redmi 11 Prime) ஆகிய இரண்டையுமே கருத்தில் கொள்ளலாம். நினைவூட்டும் வண்ணம் போக்கோ சி55 ரூ.8,999 க்கும், ரெட்மி 11 ப்ரைம் ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது.
ரியல்மி சி55 அசல் மற்றும் ஆஃபர் விலை: இது 4ஜிபி + 64ஜிபி, 6ஜிபி + 64ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகி உள்ளது. அவைகள் முறையே ரூ.10,999. ரூ.11,999 மற்றும் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும். அறிமுக சலுகையின் கீழ் அனைத்து மாடல்களின் மீதும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது.
ரூ.1000 என்கிற தள்ளுபடியானது ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கார்டுகளின் வழியாக நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, ரியல்மி சி55 ஸ்மார்ட்போனானது ரியல்மி ஸ்டோர் (Realme Store) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இன்று முதல் (மார்ச் 29, 12 மணி முதல்) வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








