Home
Mobile

OnePlus 13s ஸ்மார்ட்போனை நம்பி வாங்க நச்சுனு 6 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க ஒரே 1 காரணம்!

ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஜூன் 12) முதல் தொடங்கியது. ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனை ரூ.54,99-க்கு பதிலாக ரூ.49,999-க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனை ரூ.59,999-க்கு பதிலாக ரூ.54,999-க்கும் வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13எஸ் ஆனது கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ (Plus Key) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலான ஒன்பிளஸ் ரசிகர்களை மட்டுமின்றி, பொதுவான வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும்படி உள்ளது. இருப்பினும் நீங்கள் "எல்லோரும் வாங்குவதால் நானும் கண்களை மூடிக்கொண்டு வாங்க முடியுமா?" என்று கேட்பவராக இருந்தால்.. சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

OnePlus 13s நம்பி வாங்க 6 காரணங்கள்.. தவிர்க்க 1 காரணம்!

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 6 நல்ல காரணங்களையும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் (யார் வாங்காமல் தவிர்க்கலாம்) என்பதற்கான நியாயமான 1 காரணத்தையும் இங்கே பட்டியலிட்டு உள்ளோம். ஒன்பிளஸ் 13எஸ் மாடலை வாங்குவதற்கு முன், இது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 6 காரணங்கள்:
1. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது தரமான 120ஹெர்ட்ஸ் எல்டிபிஓ அமோஎல்இடி (120Hz LTPO AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது
2. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அளவில் சிறியதாக, இலகுரக வடிவமைப்பை கொண்டுள்ள அதே சமயம் ஐபி65 ரேட்டிங் உடன் வருகிறது

3. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆனது ஸ்மூத் ஆன பெர்பார்மென்ஸ்-ஐ உறுதி செய்கிறது
4. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் நல்ல கனெக்டிவிட்டியை வழங்குகிறது; கூடவே இசிம் (eSIM) ஆதரவையும் கொண்டுள்ளது

5. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த கேமரா செட்டப்புமே நம்பகமானதாக உள்ளன. நல்ல அவுட்புட்களை வழங்குகின்றன
6. கடைசியாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பும் அருமையாக உள்ளது. இது 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடனான 5850mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்ப்பதற்கான ஒரே 1 காரணம்:
1. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் அல்ட்ராவைடு கேமரா இல்லை. ரூ.54,999 மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனில், இது நிச்சயமாக ஒரு பெரிய குறையாக தெரியும்; முக்கியமாக மொபைல் போட்டோகிராஃபி ஆர்வலர்களுக்கு! இதுதவிர்த்து குறை சொல்லும் அளவிற்கு ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் வேறு எதுவும் இல்லை.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே விவரங்கள்: 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், 2,160Hz PWM டிம்மிங் ரேட், ஆக்வா டச் (Aqua Touch) 2.0 தொழில்நுட்பம், பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும் க்ளோவ் மோட் (Glove Mode) உடனான 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட் விவரங்கள்: இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடனான ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்கிறது. மேலும் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள்: இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார் + எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு) கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரங்கள்: இது 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடனான 5850mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Reasons to Buy OnePlus 13s Without Any Hesitation and 1 Fair Reason to Skip Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X