ஜஸ்ட் மிஸ்.. Nothing Phone 3-ஐ நம்பி வாங்க 6 காரணங்கள்.. வாங்காமல் எஸ்கேப் ஆக 5 காரணங்கள்!
அடேய் ஆபர் விலை கூட அதிகமாகத்தான் இருக்கிறது! - என்பது தான் உங்களுடைய மைண்ட் வாய்ஸ் என்றால், நீங்கள் தனியாக இல்லை; கிட்டத்தட்ட எங்களுடைய எண்ணமும் கூட அப்படித்தான் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 மாடலின் அறிமுகமானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் ஐபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.79,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் நத்திங் போன் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.62,999 என்பது அறிமுக விலை தான். ஜூலை 15 முதல் தொடங்கும் விற்பனையின் போது, பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்த்து இதை ரூ.62,999 ஆக குறைக்க முடியும் என்று நத்திங் நிறுவனம் கூறுகிறது.

இது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ஆபர் விலையாகும். 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.89,999 ஆகும்; ஆபர் விலை ரூ.72,999 ஆகும்.
உங்களுடைய இன்னொரு மைண்ட் வாய்ஸும் எங்களுக்கு கேட்கிறது "விலையை மட்டுமே வைத்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா அல்லது வாங்க வேண்டாமா என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது அல்லவா? குறிப்பாக ஐபோன்களுக்கு போட்டியாக வந்துள்ள ஒரு ஸ்மார்ட்போனை?" - சரிதான்! ஆகையால் தான் நத்திங் போன் 3-ல் உள்ள 6 நிறைகள் (நம்பி வாங்க 6 காரணங்கள்) மற்றும் 5 குறைகளை (வாங்காமல் தவிர்க்க 5 காரணங்கள்) இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் நிறைகள்:
1. புதிய கிளாஸ் பேக் (Glass back) மற்றும் எசன்ஷியல் கீ (Essential Key) உடனான டிசைன்
2. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் ஆதரவுடன் பிரைட் ஆன ஓஎல்இடி டிஸ்பிளே (120Hz OLED Display)
3. ஏராளமான கஸ்டமைசேஷன்களுடன் (Customization) தனித்துவமான சாஃப்ட்வேர் டிசைன் (Software Design)
4. ஸீரோ தெர்மல் த்ராடலிங் (Zero thermal throttling) உடனான பெர்பார்மென்ஸ்
5. ஆல்ரவுண்ட் பெர்பார்மென்ஸை (Alround Performance) வழங்கும் கேமரா செட்டப்
6. மிகவும் சத்தமாக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள்
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் குறைகள்:
1. எசன்ஷியல் கீ-யின் பிளேஸ்மென்ட் ஆனது பவர் பட்டனை (Power Button) ஒரு புதிய இடத்திற்கு நகர்த்தியுள்ளது, இது பழகுவதற்கு சிறிது நேரம் எடுக்கும்.
2. இதே விலைப்பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்கள் ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) விட அதிக ப்ரொடெக்ஷன் ரேட்டிங்கை கொண்டுள்ளன
- ப்ரைமரி கேமரா மட்டுமே 4கே வீடியோ ரெக்கார்டிங்கை (4K Video Record) ஆதரிக்கிறது
- இ-சிம் ஆதரவு (e-Sim Support) இல்லை (இதைவிட மலிவான நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடலில் கூட இ-சிம் ஆதரவு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)
- நத்திங் போன் 3-ன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் (Charger) இடம்பெறவில்லை; ஆக தேவைப்படுவோர்கள் தனியாக பணம் கொடுத்து சார்ஜர் வாங்க வேண்டும்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு மைக்ரோ-எல்இடி டிஸ்பிளே உள்ளது. அது கிளிப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) என்று அழைக்கப்படுகிறது. இது ஐபி68 ரேட்டிங் உடன் வருகிறது. கடைசியாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு 5 ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டிஅப்டேட்கள் கிடைக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








