ரூ.7000 வரை தள்ளுபடி! 6 Realme போன்கள் மீது திடீர் ஆஃபர்! ரூ.6499 இருந்தா புது போன்! Amazon-ல் ஆர்டர் அள்ளுது!
அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதான ஒரு பிரத்யேக விற்பனை மிகவும் அமைதியான முறையில் நடந்து வருகிறது. ரியல்மி பிராண்ட் ஸ்டோர் என்கிற பேனரின் கீழ் 6 ரியல்மி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளன.
குறிப்பிட்ட பேனரில், இந்த விற்பனை எப்போது தொடங்கியது என்கிற தேதியும் இல்லை; இது எப்போது முடியும் என்கிற தகவலும் இல்லை. இருப்பினும் அந்த பேனரில் கிறித்துமஸ் மரம் இருப்பதை வைத்து பார்க்கும் போது, இது 2024 கிறிஸ்த்துமஸ் மற்றும் நியூ இயர் சலுகையாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. ஆக எப்படியும் இந்த விற்பனை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.

01. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரியல்மி 70 டர்போ (Realme 70 Turbo): இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T): இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.7000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரியல்மி 70எக்ஸ் 5ஜி (Realme 70x 5G): இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1750 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65): இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61): இந்த ஸ்மார்ட்போன் 90ஹெர்ட்ஸ் ஐ கம்போர்ட் டிஸ்பிளே, ஐபி 54 ரேட்டிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், டூயல் ரியர் கேமரா செட்டப், அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 32-மெகாபிக்சல் செல்பீ, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி.
ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 6ஜிபி வரை ரேம், டைனமிக் ரேம் அம்சம், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி.
ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, யுனிசாக் டி612 சிப்செட், விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மொத்தம் 12ஜிபி ரேம், 32எம்பி ப்ரைமரி கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








