மிரளுது டிஸ்கவுண்ட்.. கம்மி பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கொண்ட மெயின் கேமரா, சாம்சங் சென்சார் கொண்ட டெலிபோட்டோ கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) போனானது, நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
ரியல்மி ஜிடி 6 அம்சங்கள் (Realme GT 6 Specifications): இந்த ரியல்மி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 808 (Sony LYT 808) சென்சார் வருகிறது.

மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் வருகிறது. டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாரும் வருகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் டிஸ்பிளே பீச்சர்களில் தூக்கி சாப்பிட்டுள்ளது. 6.78 இன்ச் (2780 × 1264 பிக்ச்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஓ (LTPO) மாடலாகும்.
மேலும், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), டிசி டிம்மிங் (DC dimming), 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த பீச்சர்களுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது.
ரியல்மி யுஐ 5 (realme UI 5) கொண்டிருக்கிறது. 5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 6 போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் உள்ளது. ப்ளூயிட் சில்வர் (Fluid Silver) மற்றும் ரேசன் கிரீன் (Razer Green) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மியின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.40,999 ஆக இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








